Wednesday, August 30, 2023

மணிப்பூர் – 48 நிமிடங்கள்

  


மணிப்பூர் சட்டப்பேரவை நேற்று கூடியுள்ளது.  ஒரே ஒரு நாள் கூட்டத் தொடர் என்று அறிவித்திருந்தது அரசு.

 கலவரத்தில் இறந்து போனவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி அனுசரித்ததும் காங்கிரஸ் கட்சி எம்.ஏ.க்கள் குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அரசு மறுக்க குழப்பம் … அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது.

 மீண்டும் கூடுகிறது. மீண்டும் அதே கோரிக்கை. மீண்டும் மீண்டும் குழப்பம், கூச்சல்.

 இம்முறை சபாநாயகர் சட்டமன்றத்தை காலவரையறை இன்றி ஒத்தி வைக்கிறார்.

 சிக்கல் நிறைந்த சூழலில் அதைப் பற்றி விவாதிக்க மனமில்லாத, தைரியமில்லாத பாஜக 48 நிமிடங்களில் ஒரு சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்து வைத்துள்ளது.

 ஏன் இந்த கூட்டத்தொடர் நடக்க பாஜக விரும்பவில்லை?

 ஏன்?

 இக்கூட்டத்தொடரை குக்கி இனத்தைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ க்களும் புறக்கணித்திருந்தனர்.

 அதில் ஏழு பேர் பாஜக கட்சிக்காரர்கள்தான்.

No comments:

Post a Comment