Sunday, August 6, 2023

டிமோ பாக்கி 12,628 கோடி ரூபாய் . .

 


சில நாட்கள் முன்பு ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.

மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதிச் சட்டத்தின் படி ஒன்றிய அரசு  மாநிலங்களுக்கு  வைத்துள்ள பக்கித் தொகை 12,625 கோடி ரூபாய்.

ஊதியத்திற்காக மட்டும் கொடுக்கப்பட வேண்டிய தொகை 6362 கோடி ரூபாய். பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களுக்கான நிதியில் ஒன்றிய அரசு 60 % மும் மாநில அரசு 40 % மும் வழங்கும். அப்படி ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பாக்கி 6266   கோடி ரூபாய்.

இதிலே மேற்கு வங்கத்திற்கு 18 மாத பாக்கி. மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களுக்கு  ஐந்து  மாத பாக்கி.

வேலையுறுதிச்சட்டத்தை அழித்து விட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு அந்த நிதியை அதானி, அம்பானிகளுக்கு தார்  வார்க்கவே இந்த ஏற்பாடு.

No comments:

Post a Comment