மாரிமுத்து - இன்று மறைந்த குணச்சித்திர நடிகர் சமீப காலத்தில் பெரும் புகழ் பெற்றவர். சிறிய பாத்திரமாக இருந்தாலும் அதிலும் தன் முத்திரையை பதித்தவர். நீண்ட காலத்திற்குப் பிறகு என்னை தொலைக்காட்சித் தொடரை பார்க்க வைத்தது "எதிர் நீச்சல்"தான்.
ஆதி குணசேகரனாக மிரட்டி அனைவரையும் எரிச்சலூட்டியவர் என்றால் அது அவரது நடிப்பின் வெற்றி.
பரியேறும் பெருமாள் படத்தைப் பற்றி பலர் எழுதினார்கள். கடைக்குட்டி சிங்கமும் எனக்கு பிடிக்கும். க்ளைமேக்ஸில் கோயிலில் நடப்பதை அலைபேசி மூலமாக வில்லனுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருப்பார். கார்த்தியின் அம்மா பேசும் வசனம் திருப்பு முனையாக இருக்கும். அப்போது போனை அணைத்து விட்டு கார்த்தியிடம் சென்று கையைப் பிடித்துக் கொள்ளும் காட்சி அவரது நடிப்பை சொல்லும்.
"ஏம்மா ஏய்" என்ற குரல் இனி ஒலிக்காது என்பது துயரம். அவருக்கு மனமார்ந்த அஞ்சலி.
கடந்த பத்தியோடு இந்த பதிவு முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஜோதிடத்திற்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்காக அவரது மரணத்தை சங்கிகள் கொண்டாடுவது கேவலமானது. அஞ்சலி செய்தியில் 64 பேர் சிரித்து வைத்திருப்பதும் பலர் மோசமாக எழுதியுள்ளதும் சங்கிகளின் கேவலமான தரத்திற்கு சான்று. இவர்கள் மனிதப் பிறவிகளே கிடையாது.
No comments:
Post a Comment