கண்ணியமற்ற காவலர்கள் - விலங்கினும் கீழானவர்கள்
கண்ணீர் வர
வைத்த கருத்தரங்கு
இன்று
எங்கள் சங்கத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் - வெண்மணி
தியாகிகள் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்
தலைவர் தோழர் பெ.சண்முகம் அவர்கள் "வாச்சாத்தி - நீதிக்கான நெடும்
பயணம் " என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.
வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையும் வனத்துறையும் இளம் பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை
பற்றி அவர் விவரித்த போது, அவர்கள் அளித்த சாட்சியம் பற்றி உணர்ச்சி பொங்க
அவர் பேசிய போது அரங்கில் அமர்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
இப்படி கூட அரக்கத்தனமாக நடந்து கொள்ள முடியுமா என்ற கோபமும், பாதிக்கப்பட்ட மக்கள் இறுதி வரை உறுதியாக
இருந்தார்கள் என்பதை அறிந்த போது நெகிழ்வாக இருந்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதியில் நியாயம் கிடைத்தது,
தவறிழைத்தவர்கள் தண்டனை பெற்றார்கள் என்ற போது நிறைவாகவும் இருந்தது.
இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைத் தண்டனை பெற்ற
பின்பும் காவல்துறையின் அரக்க குணம் மாறவில்லை. திருக்கோயிலூரில் மீண்டும் அதே அரக்கத்தனம் அரங்கேறியுள்ளது.
தோழர் சண்முகம் பேசுகிற போது கூறினார். " விலங்குகள்
போல நடந்து கொண்டார்கள் என்று சொல்லி விலங்குகளை கேவலப் படுத்தாதீர்கள்"
அது சரிதான் என காக்கிச்சட்டைகள் நிரூபித்துக்
கொண்டே உள்ளனர்.
No comments:
Post a Comment