Friday, September 29, 2023

எப்படி இருந்த பண்ருட்டியார்!!!!

 



நெய்வேலியில் நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு வளர்ச்சி அதிகாரியின் திருமணத்தை நடத்தி வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் வந்திருந்தார். சேவல்- இரட்டைப்புறா காலத்திற்குப் பின் அவர் தனியாக “உதிர்ந்த ரோமங்கள்” என்று பட்டம் வாங்கியிருந்த காலம் என்று நினைவு.    அப்போது அவர் ஆதரவாளர் ஒருவர் “பண்ருட்டியாரின் பெருமை இந்தம்மாவுக்கும் தெரியாது, அந்தம்மாவுக்கும் தெரியாது. தெரிந்த ஒரே அம்மா இந்திரா காந்தி அம்மாதான்” என்று  பேசினார்.  எம்.ஜி.ஆர் காலத்தில் சக்தி மிக்க அமைச்சராக, மத்தியரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு செல்பவராக இவர்தான் இருந்தார்.

 பின்னாளில் அவர் பாமகவின் ஒரே எம்.எல்.ஏ வாக 1991 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு தாமரைக்கனியால் செல்லமாக தட்டப்பட்ட போது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களே ஒரு வார காலம் முடங்கிப் போனது.

 அப்பேற்பட்டவர் ஆட்டுக்காரன் அறிஞர் அண்ணா பற்றியும் ஜெ பற்றியும் பேசியது பற்றி ஊடகக்காரர்கள் கேட்டதற்கு எப்படிப்பட்ட பதில்களை சொல்லியுள்ளார் பாருங்கள்.

 அண்ணாவைப் பற்றி அண்ணாமலை பேசியது சரியல்லதான். ஆனாலும் அதில் உள்நோக்கம் இருப்பதாக சொல்ல வேண்டியதில்லை என்கிறார் பண்ருட்டியார்.

 ஜெ வை தண்டனை வழங்கபட்டவர் என்று அண்ணாமலை சொன்னது குற்றச்சாட்டில்லை. அது நிஜம்தானே என்று திருப்பி கேட்கிறார் பண்ருட்டியார். அடுத்த நொடியே ஆனால் அந்த தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை என்றும் சொல்கிறார்.

 பாவம் பண்ருட்டியார்! ஓபிஎஸ் கட்சியின் உறுப்பினராக எடப்பாடி காலி செய்த பாஜக கூட்டணியில் ஒட்டிக் கொள்ள ஆட்டுக்காரனுக்கெல்லாம் வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டார்.

 

No comments:

Post a Comment