வினாயகர் சதுர்த்தியின் போது வழக்கமாக எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வைக்கும் வினாயகர் சிலை இந்த வருடம் இல்லை.
அதனால் நாள் முழுதும் குத்து பாடல்களை மட்டும் கேட்கும் அவஸ்தையில் இருந்து எங்களுக்கு விடுதலை.
எங்களுக்கு மட்டுமா விடுதலை?
வினாயகருக்கும்தான்.
குத்து பாடல்களை கேட்பதிலிருந்து மட்டுமல்ல, பிள்ளையார் சிலையை திரை போட்டு மூடி விட்டு அங்கேயே டாஸ்மாக் சரக்குகளை அடிப்பதை வேடிக்கை பார்ப்பதிலிருந்து கூட.
ஆனால் இந்த விடுதலை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.
சங்கப்பணியாக நேற்று மாலை அலுவலகம் சென்ற போது ஒரு கோயிலிலும் இன்னும் இரண்டு இடங்களிலும் பிள்ளையார் சிலை இருந்தது.
கோயிலில் இருந்து மட்டும் "ஒன்பது கோள்களையும் ஒன்றாய் காண" வரச்சொல்லும் பாடல். மற்ற இடங்களில்?
காவாலய்யா, நூ காவாலய்யா, ஆஆஆஆஆ
அலப்பறை அலப்பறை சூப்பர் ஸ்டாரு.
திரும்பி வருகையில் ஒலித்த பாடல்கள் சத்தியமாக புரியவே இல்லை. பாவம் பிள்ளையார் . . . .
No comments:
Post a Comment