இது பொறுப்ப தில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்.
அண்ணன் கையை எரித்திடுவோம்
-
பாஞ்சாலி சபதத்தில் பாரதி
நல்ல வேளை, நான் அந்த காணொளியை பார்க்கவில்லை. ப்ளர்
செய்யப்பட்ட புகைப்படங்களே மணிப்பூரில் நிகழ்ந்த அராஜகத்தை புரிய வைத்தது.
கொடுமையைச் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும். வேடிக்கை
பார்த்தவர்களை சிறைக்குத் தள்ள வேண்டும் என்றெல்லாம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்
திருமதி குஷ்பூ ட்வீட்டியிருந்தார்.
யாரெல்லாம் குற்றவாளிகள்?
பெண்களை இழிவு படுத்திய வெறி பிடித்த ஜென்மங்கள்.
வேடிக்கை
பார்த்த உள்துறை அமைச்சர்,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடும் வரை
உறக்கத்தில் மூழ்கிப்போன கையாலாகாத டிமோ
No comments:
Post a Comment