Saturday, July 15, 2023

டீயிலேயே பொதுத்தன்மை இல்லையே

 

பொது சிவில் சட்டம் ஏன் தேவையில்லாத ஆணி என்பதை ஒரு எளிய உதாரணம் கொண்டு தீக்கதிர் ஆசிரியரும் தமுஎகச தலைவருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் பேசியிருந்ததை தோழர் சுப்பையா சங்கரநாராயணன் பகிர்ந்து கொண்டிருந்தார். 

அதனை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.


பொது சிவில் சட்டமும்
ஒரு டீ கடை பெஞ்சும்.
அட ஒரு டீ கடைக்குப் போய் சாதாரண டீ குடிக்கிற விஷயத்தில பொதுத் தன்மை இருக்காய்யா?
பத்து பேர் ஒண்ணா போய் ஒரு கடைல டீ குடிக்கப் போனா....
ஒருத்தருக்கு லைட் டீ....
ஒருத்தருக்கு ஸ்ட்ராங் டீ....
ஒருத்தருக்கு மீடியமா.....
ஒருத்தருக்கு சர்க்கரையே இல்லாம...
ஒருத்தருக்கு அரைச் சீனி....
ஒருத்தருக்கு கால் சீனி....
ஒருத்தருக்கு சீனி குறச்சு....
ஒருத்தருக்கு பிளாக் டீ.....
ஒருத்தருக்கு லெமன் டீ....
ஒருத்தருக்கு தண்ணி குறச்சு....
ஒருத்தருக்கு நுரை மேல பால விட்டு ஒரு சுத்து சுத்தி...
ஒருத்தருக்கு பால் ஆடைய மேல எடுத்து போட்டு....
ஒருத்தருக்கு பித்தள டவரா தம்ளாருல.....
ஒருத்தருக்கு சில்வர் தம்ளாருல.....
ஒருத்தருக்கு கண்ணாடி கிளாஸுல....
ஒருத்தருக்கு ஒண்ணுமே சொல்லாம,
"மாஸ்டருக்கு எனக்கு எப்படீனு தெரியும்....என்ன....மாஸ்டர்...
இப்படி 16 தனித்தனி பழக்க வழக்கங்கள். ( இன்னும் இருக்கும்)
ஒரு 10 பேர்ட்ட சாதாரண டீ குடிக்கிறதுலயே பொது பழக்க வழக்கங்கள் இல்லயே...
இதுல எப்படிப்பா....
140 கோடி மக்களுக்கு ஒரு பொதுவான சட்டத்தப் போடறது?



( மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் 13.7.23 தேதியில் பழநியில் ஆற்றிய உரையிலிருந்து.....)

No comments:

Post a Comment