Thursday, February 26, 2026

நடுஜாமத்துல சுடுகாட்டுக்கு நீங்க போங்க மோடி

 

\இன்று காலை ஆங்கில இந்து நாளிதழை கையிலெடுத்ததுமே கடுப்பானது. 


இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, இஸ்ரேலோடு இந்தியா உறுதியாக நிற்கிறது என்று பேசியுள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். இஸ்ரேல் மீது 07, அக்டோபர், 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று வேறு சொல்லியுள்ளார்.

இஸ்ரேல் பற்றிய எந்த வித புரிதலும் இல்லாத ஆள் என்று மோடியை சொல்ல முடியாது. இந்தியாவில் ஊடகங்களையும் எதிர்க்கட்சியினரையும் உளவு பார்க்க பெகாஸஸ் மென் பொருளை இஸ்ரேலிடமிருந்துதானே அவர் வாங்கியிருந்தார்.

ஹமாஸிடம் அடி வாங்குமளவிற்கு இஸ்ரேல் என்ன அப்பாவி நாடா? மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கொள்கையை பின்பற்றும் நாடா அது?

இஸ்ரேலின் தோற்றமே அராஜகமானது. பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து துரத்தி விட்டு அடாவடியாக ஆக்கிரமிப்பு செய்து உருவானதுதான் இஸ்ரேல்.

காஸா திட்டு, மேற்குக் கரை என்று இரு பகுதிகளோடு சுருங்கிப் போன பாலஸ்தீனத்தை அங்கேயாவது நிம்மதியாக வாழ விட்டார்களா?

மோடி சொல்கிற & அக்டோபர் 2023 தாக்குதலுக்குப் பிறகு எழுதிய பல பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன். தயவு செய்து பொறுமையாய் படியுங்கள்.










ஏற்கனவே பாலஸ்தீனியர்களில் பாதிப் பேரை கொன்று விட்ட இஸ்ரேல், ஹமாஸின் தாக்குதலுக்குப் பின்பு இன்னும் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது. குழந்தைகளையும் பெண்களையும் கூச்சமின்றி கொன்றுள்ளது. மருத்துவமனைகளை குறி வைத்து தாக்கியுள்ளது. 

உலகின் மிகப் பெரிய தீவிரவாத நாடு, பேரழிவு சக்தி இஸ்ரேல்.

நீங்கள் அதனுடன்தான் நிற்பீர்கள்.
 
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இஸ்ரேலோடு போராடுபவர்களின் மதம் உங்களுக்கு பிடிக்காது.

உங்கள் எஜமானன் அமெரிக்காவின் நண்பன் இஸ்ரேல்.

அதனால் நீங்கள் இஸ்ரேலோடு நில்லுங்கள். 

ஏன் இந்தியா நிற்கிறது என்று சொல்லி எங்களையும் நடு ஜாமத்தில் சுடுகாட்டுக்கு அழைக்கிறீர்கள்? 

7 comments:

  1. jew and gujjus majority are thieves.

    ReplyDelete
  2. நடு ஜாமத்தில் சுடுகாட்டுக்கு போனால் என்ன ஆகும்

    ReplyDelete
    Replies
    1. போய் பார்த்து விட்டு சொல்லவும்

      Delete
    2. Real communists wouldn't have foolish beliefs

      Delete
    3. Sanghi Stupid don't have the brain understand a meme and its relation to the post. A shameless idiot is coming again and again despite asking to get last.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete