நீட் தேர்வு என்பது பயிற்சி மையங்களுக்கு கொட்டிக் கொடுக்க வசதியுள்ள பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கான தேர்வு என்பதைக் கடந்து மோசடியான வழிகளில் தேர்வாக லட்சங்களை கொடுக்கும் வல்லமை உடையவர்களுக்கான தேர்வு என்பதுதான் இப்போதைய யதார்த்தம்.
உச்ச நீதிமன்றம் தேர்வு மையங்களின் அடிப்படையிலான முடிவுகளை வெளியிடச் சொல்லி உத்தரவிட அத்தகவல் மோசடியை நிரூபித்துள்ளது.
அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற சின்னஞ்சிறு ஊரிலிருந்துதான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதே போல மஹாராஷ்டிரா, குஜராத், பீகார், உ.பி ஆகிய மாநிலங்களில் உள்ள சில குறிப்பிட்ட மையங்களின் மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள். கேள்வித்தாள்கள் கசிவும் அங்கெல்லாம் நடந்துள்ளது. விபரங்கள் இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் உள்ளது.
இப்படி மோசடிகளின் மொத்த வடிவமாக உள்ள “நீட்” தேர்வு இனியும் வேண்டுமா?
தமிழ்நாட்டுடன் இந்திய மக்கள் அனைவரும் இணைந்து உரக்க குரல் கொடுக்க வேண்டும். . .
BAN NEET
No comments:
Post a Comment