நேற்று மக்களவை களை கட்டியது. ராகுல் காந்தி தொடங்கி தோழர் சு.வெ, ஆ.ராசா, மொஹுவா மொய்த்ரா என அனைவரும் அபூர்வப் பிறவியை பின்னி எடுத்து விட்டார்கள்.
இந்தியாவிலேயே மோடிக்கு பிடிக்கவே பிடிக்காத இடம், வாரத்துக்கு இரண்டு நாட்கள் அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிற இடம், அங்கே கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் உட்கார வைத்து விட்டார்கள்.
சிவந்த மண் படத்தில் "பட்டத்து ராணி' பாடலின் போது தன்னை கொலை செய்யத்தான் நிகழ்ச்சியே நடக்கிறது என்று தெரிந்து கொண்ட திவான் நம்பியாரின் முகம் எப்படி இறுக்கமாக இருந்ததோ அது போலத்தான் ராகுல் பேசும் போது மோடியின் முகம் இருந்தது.
நாகரீகமாக பதில் அளிக்க அவர் என்ன நேருவா இல்லை சீத்தாராம் யெச்சூரியா?
கேடு கெட்ட, கேவலமான அரசியல்வாதிதானே!
ஏற்கனவே இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை திருப்ப முயற்சி செய்தார். இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகத்தான் சில்லறை சங்கிகளின் பதிவுகள் அமைந்துள்ளது.
மோடியின் பதில் எப்படி இருக்கும்?
கீழேயுள்ள படம் நினைவில் உள்ளதா?
மக்களவையில் மோடி வெளிப்படுத்திய ஆபாச உடல் மொழியின் ஒரு பகுதி.
இப்போது இன்னும் அசிங்கமாக, கேவலமாக, தரக்குறைவாக, ஆபாசமாக, பொய் மூட்டைகளோடு விஷத்தைக் கக்குவார்.
ஆமாம்!
பரமாத்மா எதுக்கு இந்த மாதிரி பாவாத்மாக்களை படைச்சு அனுப்பி இந்தியாவை சீரழிக்குது?
இந்த ஆள் பிறப்பதற்கு இடம் தந்ததால் இந்தியாவைச் சீரழிக்கிறார் பரமாத்மா.
ReplyDeleteDMK adimai
ReplyDeleteகோழையாய் ஒளிந்து நிற்கும் நீ யாருடைய அடிமை?
Delete