கீழேயுள்ள செய்தியை நேற்று படிக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.
விசாகப்பட்டிணம் எஃகு தொழிற்சாலை மூடப்படாது என்று ஒன்றிய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி உறுதியளித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு மேல் விசாகப்பட்டிணம் நகர மக்கள் நடத்திய போராட்டம் தந்த வெற்றி இது.
இந்த நிறுவனத்திற்கு இது புதிதல்ல.
சில வருடங்களுக்கு முன்பு எங்களின் அகில இந்திய மாநாடு ஒன்றில் அன்றைய அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் பேசியது இப்போதும் நினைவில் உள்ளது.
ஆந்திராவில் இரண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சி நடந்தது.
ஒன்று ஹைதராபாத் ஆல்வின் நிறுவனம். இன்னொன்று விசாகப்பட்டிணம் எஃகுத் தொழிற்சாலை.
ஆல்வின் தொழிலாளர்கள் அவர்கள் ஆலைக்குள் மட்டும் போராடினார்கள். அப்படி ஒரு பிரச்சினையோ போராட்டமும் வெளியே யாருக்கும் தெரியவில்லை. தனியார்மயத்தை தடுக்க முடியவில்லை.
அதே நேரம்
விசாகப்பட்டிணம் தொழிலாளர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள். தொழிற்சாலை பிரச்சினை மக்கள் பிரச்சினையாக, நகரத்தின் பிரச்சினையானது. மக்களின் போராட்டமாக பரிணமித்தது. அதன் விளைவாக தனியார்மயம் தடுக்கப்பட்டது.
இப்போதும் விசாகப்பட்டிணம் எஃகு தொழிற்சாலையை பாதுகாத்தது அந்த நகரத்தின் மக்கள் நடத்திய உறுதியான, தொடர் போராட்டமே.
No comments:
Post a Comment