Tuesday, January 30, 2024

நல்லிணக்கத்தை சீரழிக்காதீர் யுவர் ஆனர்

 


நம் நீதிபதிகள் சில சமயம் கருப்பு அங்கிகளுக்குப் பதிலாக காவி அங்கிகள் அணிகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

 


இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் மாற்று மதத்தவர் இந்து கோயில்களுக்கும் வருவது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் காட்சிதான்.இதனால் எந்த ஒரு கடவுளும் கோபித்துக் கொண்டு மாற்று மதத்தவரின் கண்ணை குத்தியதாக எந்த ஒரு சம்பவமும் இது நாள் வரை நடந்ததாக தெரியவில்லை. சபரிமலை ஐயப்பன் கோயிலின் அன்றாட வழிபாட்டின் துவக்கமும் நிறைவும் கே.ஜே.யேசுதாஸின் “ஹரிவராசனம்” பாடலுடன்தான்.  கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காசி விஸ்வநாதர் கோயிலை விட்டு வர மாட்டேன் என்றவர் பாரத ரத்னா ஹெனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான். மீனாட்சியை  தரிசிக்க எத்தனையோ ஐரோப்பியர்கள் தினந்தோறும் மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

 உடல் நலன் சரியாக வேண்டும் என்று வைத்தீஸ்வரன் கோயிலோடு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவையும் வேண்டிக் கொள்பவர்கள் பலர்.

 நம்பிக்கை இல்லாவிட்டாலும் குடும்பத்தினரின் உணர்வுகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் உள்ளே வருபவர்களும் என்னைப் போல ஏராளம்.

இந்த மத அமைதியை, நல்லிணக்கத்தை

பொருந்தாத,

அமலாக்க முடியாத,

துவேஷத்தை உருவாக்கும்

நெருடல் தீர்ப்புக்களால் பாழாக்காதீர்கள் நீதிபதியம்மா அவர்களே!

No comments:

Post a Comment