உத்தரப்பிரதேசத்தில் இன்று மெயின் கேலிக்கூத்தைத் தவிர ஒரு கேலிக்கூத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
பல தனியார், அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் ஆப்பரேஷன் செய்து இன்று ஆண் குழந்தைகளை பிரசவிப்பதற்கான ஏற்பாடு. கருவின் பாலினம் கண்டறிவதே கிரிமினல் குற்றம். ஆனால் இங்கே அதற்கடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.
எதற்கு?
இன்று பிறக்கும் ஆண் குழந்தைகள் ராமர் போல தெய்வக்குழந்தைகளாக இருப்பார்களாம்.
அட முட்டாப்பசங்களா!
குழந்தை, தாய் இருவரின் உடல் நிலை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் செய்யப்படுகிற முட்டாள்தனம். முழுமையாக வளர்ச்சி அடையாத குழந்தையை வெளியில் எடுத்தால் அதன் எதிர்காலம் என்னாகும்?
அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை!
அதுவும் பொருத்தம்தான் ...
கட்டிய மனைவியை தீயில் இறங்க வைத்து பின் கர்ப்பிணி என்றும் பாராமல் காட்டிற்கு அனுப்பியவரைப் போல குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் மட்டும் சமத்துவ சிந்தனையோடா இருப்பார்கள்!
ஆணாதிக்கவாதிகள்தான் . சங்கி குணாம்சம்தானே இது!
No comments:
Post a Comment