Friday, January 5, 2024

சனாதானம் டிமோவையும் மதிக்காது.

 


அயோத்தி ராமர் கோயிலில் ராமர் விக்கிரகத்தை டிமோ பிரதிஷ்டை செய்யக் கூடாது. அதற்கு அவர் அருகதை இல்லை என்று சுனா சாமி முதலில் சொன்னார். மனைவியோடு வாழவில்லை என்பதை காரணமாகவும் சொன்னார். அஸ்வமேத யாகம் செய்த போது ராமரும் சீதையுடன் வாழவில்லை என்பதும் சீதைக்குப் பதிலாக தங்கத்திலான சிலை ஒன்றை செய்து யாகம் நடத்தினார் என்பது ராமாயணத்தில் வரும் காட்சி. 


ஆக மனைவியோடு வாழவில்லை என்பதெல்லாம் காரணமல்ல. பின்?

இதோ அடுத்த தாக்குதல் பூரி சங்கராச்சாரியாரிடமிருந்து வந்து விட்டது.


சனாதன தர்மம் டிமோ, பிரதமராக இருந்தாலும் மதிக்காது என்பதற்கு இன்னும் ஒரு புதிய உதாரணம் இது.

உண்மையான வீரன், நேர்மையான வழிமுறைகள் மூலம் போர்களை வென்ற சத்ரபதி சிவாஜிக்கு முடி சூட்டவே படுத்தி எடுத்தவர்கள் டுபாக்கூர் டிமோவை மட்டும் விட்டு விடுவார்களா?

சந்தர்ப்பம் கிடைத்த போது தங்கள் ஜாதிய மேட்டிமை வாத விஷத்தை டிமோவிடமும் கக்கி விட்டார்கள்/ 

ஆனாலும் பெரும்பான்மை சங்கிகள் இதனை உணர்ந்துள்ளனரா?

மாலை பார்ப்போம்.


No comments:

Post a Comment