பிரபாகரனை சீமான் வெறும் பத்து நிமிடம்தான் சந்தித்தார் என்று விஷயம் தெரிந்தவர்கள் முன்பே சொல்லியுள்ளனர். ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான் எடுத்துக் கொண்டுள்ளார். அது கூட இவர் பெருமையுடன் காண்பிக்கும் படமல்ல, அது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று போட்டோஷாப் செய்தவரே சொல்லியுள்ளார்.
ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்தவரை சீமான் இதுவரை எப்படியெல்லாம் முன்னிறுத்தியுள்ளார்.
இவருக்கு ஆமைக்கறி செய்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.
அடுத்து இட்லிக்குள் கறியை வைத்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.
இவர் சாப்பிடும் பொருட்களை துல்லியமாக கவனித்து அதற்கேற்றார் போல அடுத்த வேளை சாப்பாடுகளை போட்டார் என்றும் சொல்லி உள்ளார்.
இதோ இப்போது மான் ஊறுகாய் சாப்பிடச் சொன்னதாக சொல்லியுள்ளார்.
அந்த காணொளியை இங்கே பாருங்கள்.
"அடேய் சீமான், நான் ஒரு இயக்கத்தின் தலைவனடா! என்னை ஒரு செஃப் என்ற அளவில் சுருக்கிவிட்டாயடா"
என்று கேட்க பிரபாகரன் இல்லாத துணிவுதான் சீமானுக்கு. . .
எல்லோரும் தற்குறி வெட்டிக் கழகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கவன ஈர்ப்புக்காகக் கூட சீமான் இந்த கதையை உருட்டியிருக்கலாம்.
பிகு என்னத்தான் கதை விட்டாலும் சீமான் எச்சரிக்கையான மனிதர்தான். இதே மான் ஊறுகாயை இந்தியாவில் சாப்பிட்டதாக உருட்டியிருந்தால் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று தெரிந்தவர் அல்லவா அவர்!

ஆமைக்கறி என்றால் சாதாரண ஆமைக்கறி அல்ல.
ReplyDeleteபல நூறு ஆமைகளை ஓடவிட்டு, முதலில் வந்த மூன்று ஆமைகளை மட்டுமே சமைத்து போட்டதாக தகவல். ( தோற்ற மற்ற ஆமைகள் கொன்று கடலில் வீசப்பட்டது என கொசுறு தகவல் )
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉனக்கு அனுதாபம் சொல்லி உன் கதையை முடிச்சுட்டேன். இனிமே நேரடியா டெலீட் மட்டும்தான். மதியாதார் தலை வாசல் மிதிக்காதே, உனக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு,சொரணை இருந்தா இங்கே வராதே
Delete