உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்ற சனாதன வக்கீல் செருப்பை வீசியதும் தான் செய்த அயோக்கியத்தனமான செயலுக்கு கொஞ்சமும் வருந்தாததும் அந்த சனாதன வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று சனாதன அடிப்படையில் உச்ச நீதிமன்ற இதர நீதிபதிகள் முடிவெடுத்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.
ராகேஷ் கிஷோர் செயலை விட கேவலமான செயலை மோடி அரசு செய்துள்ளது.
அது என்ன?
ஒரு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்கான நாளும் குறிப்பிடப்பட்ட நிலையில் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று மனு கொடுப்பதன் நோக்கம் என்ன?
பல நாட்களாக வழக்கு நடந்து கொண்டிருந்த போது அரசுக்கு ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?
கடைசி நிமிடத்தில் மனு கொடுப்பதல் நோக்கம் ஒன்றுதான்.
வழக்கை தாமதம் செய்தால் தலைமை நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால்தான் வழக்கு விசாரணை முழுமையாக முடிந்த பின்பு நள்ளிரவில் மனு கொடுத்துள்ளனர்.
இதுவும் ஒரு விதமான தீண்டாமைதான்.
அரசே அதனை செய்வது மிகவும் கேவலமானது.


No comments:
Post a Comment