மோடி
இந்தியா திரும்பிய பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியது கீழே உள்ளது.
தமிழாக்கத்திற்கு ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கருக்கு நன்றி.
மகாவும் மிகாவும்
டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகருமான ஈலான் மஸ்க் இந்தியாவில்
கார் தொழிற்சாலை தொடங்கப் போவதாகத் அறிவித்திருந்தார். டிமோ அமெரிக்கா சென்ற போது அவரை
மஸ்க் சந்தித்தார். ஆனால் நேற்று நடந்த ஒரு ஊடக சந்திப்பில் மஸ்க்கை பக்கத்தில் வைத்துக்
கொண்டே மஸ்க்கின் திட்டம் அமெரிக்க நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நியாயமில்லை
என்று கூறியிருக்கிறார். இந்தியா அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி மீது அதிக காப்பு
வரி விதிக்கிறது என்கிற குற்றச்சாட்டின் பின்னணியில்தான் டிரம்ப் இப்படிக் கூறியிருக்கிறார்.
மஸ்க்கும் அதை ஒப்புக் கொள்கிறார்.
டிரம்ப் மேலும் கூறியது:
“காப்பு வரியைப் பொறுத்தவரையில் யாரும் என்னுடன் வாதிட முடியாது. நான் பிரதமர் மோடியிடம்
கூறினேன். இதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். பரஸ்பர வரி விதிப்பு. நீங்கள் என்ன
வசூலிக்கிறீர்களோ, நாங்களும் அதையே வசூலிப்போம்.”
Making America Great
Again (MAGA) என்பதுதான் டிரம்பின் தேர்தல் முழக்கம். நம்மவரும் எசப்பாட்டுப் பாடி
a Making India Great Again (MIGA) என்று அசடு வழிந்தார்.
MAGA ஆவதற்கு MIGAவைத் தடுத்துச்
சுரண்டுவதுதான் டிரம்பின் திட்டங்களில் ஒன்று.
அமெரிக்கச் சங்கிலி அதைத்தான்
நமக்கு உணர்த்துகிறது.
நியாயமாக
பார்த்தால் சங்கிகள் இதற்குத்தான் பொங்க வேண்டும். ஆனால் ட்ரம்பை ஏதாவது சொன்னால் அடி
விழும் என்பதால் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.
No comments:
Post a Comment