ஐ.கே.குஜ்ரால்
பிரதமராக இருக்கும் போது இன்சூரன்ஸ்துறையில் 26 % சதவிகித அன்னிய முதலீட்டுடன் தனியாரை அனுமதிக்க மசோதா கொண்டு வந்தார். இடதுசாரிகள்
தனியார் மயம் என்பதை எதிர்த்தார்கள். பாஜக பிறகு அன்னிய மூலதனம் கூடாது என்று ஒரு திருத்தம்
கொண்டு வர அதனை இடதுசாரிகள் ஆதரிக்க மசோதா தோற்றுப் போகும் என்பதால் குஜ்ரால் அதனை
திரும்பப் பெற்றார்.
பிறகு
வாஜ்பாய் பிரதமராகும் போது தனியார்மயத்தை அனுமதிக்க 49 % அன்னிய முதலீட்டோடு ஐ.ஆர்.டி.ஏ
மசோதாவை கொண்டு வந்தார். எங்கள் சங்கம், இடதுசாரிகள் நாடாளுமன்றக்குழுக்களில் கடுமையாக
எதிர்த்த பின்னணியில் அன்னிய முதலீட்டை 26 % ஆக குறைத்தார்கள்.
பின்பு ப.சிதம்பரம் அதனை 49 % ஆக உயர்த்த நினைத்தாலும்
அது நடக்கவில்லை. இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பு. அப்போது நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழுவும் அன்னிய மூலதன அளவை உயர்த்துவதை எதிர்த்து
பரிந்துரை அளித்தது. அப்போது நிலைக்குழுவின் தலைவராக இருந்தவர் வாஜ்பாய் காலத்தில்
நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பாஜக காரர் என்பது சுவாரஸ்யமானது.
பின்பு
மோடி பிரதமரானவுடன் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய
நேரடி முதலீட்டு வரம்பு முதலில் 49 % ஆக உயர்த்தப்பட்டது. அப்போது நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்
எல்லாம் மதிக்கப்படவே இல்லை. பிறகு 74 % ஆகவும் உயர்த்தப்பட்டது.
அப்போது
எழுதிய பதிவை தனியாக மீள் பதிவு செய்கிறேன்.
இந்த
பதிவின் நோக்கம் வேறு.
அன்னிய
நேரடி முதலீட்டை 74 % ஆக உயர்த்திய போது அன்னியக் கம்பெனிகளின் மூலதனம் அதிகமானாலும்
கூட நிறுவனத்தின் கட்டுப்பாடு இந்திய நிர்வாகத்திடம்தான் இருக்கும் என்று நிர்மலா அம்மையார்
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தார்.
இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்
என்று உறுதியளித்தார்.
இதோ
இப்போது 100 % அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில்
அறிவித்துள்ளார். 100 % அன்னிய முதலீடு என்றால் அப்போது இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாடு
எங்கே இருக்கும்? இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாடு இல்லையென்றால் அச்சப்படாமல் இருக்க
முடியுமா?
கமலஹாசன்
வேண்டுமானால் “என்னடி மீனாச்சி, சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு” என்று பாடலாம்.
நாம் அந்த மாதிரி சொல்ல முடியாதல்லவா! அதனால் இவ்வாறு சொல்கிறேன்.
“என்னங்க
நிர்மலா, இந்திய நிர்வாகம் இருக்கும் என்று
நீங்க சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீங்க சொன்ன வார்த்தை எப்பவும் போல காற்றோட போயாச்சு”
No comments:
Post a Comment