கொல்கத்தாவில் நடந்த கொடூரம் நம்மை பதற வைக்கிறது. நிர்பயாவை எப்படி சித்திரவதை செய்தார்களோ, அதை விட மோசமான சித்திரவதைக்கு அந்த இளம் மருத்துவர் உள்ளாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஒரு ரௌடிக் கலாச்சாரத்தை உருவாக்கி வைத்துள்ள மம்தாவே இச்சம்பவத்திற்கு முழு முதல் பொறுப்பு. ஒரே ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைத் தவிர இன்னும் ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என்பது இறந்த பெண்ணின் சடலம் சொல்லும் செய்தி.
ஆனால் மற்றவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அந்த மருத்துவ மனை போராட்ட களமானது.
போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது நூற்றுக்கணக்கான ரௌடிகள் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்ததும் அவர்கள் வந்ததும் போலீஸ் ஒளிந்து கொண்டதும், மிகப் பெரிய குற்றத்தின் பின்னணியில் இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் என்பது தெளிவாகிறது.
ஆர்ப்பாட்டம் நடத்துவதை விட்டு விட்டு தன் கட்சியில் உள்ள ரௌடிகள், பொறுக்கிகள், திருடர்களை வெளியேற்றட்டும்.
ஆனால் அதை மம்தா செய்ய மாட்டார்.
ஏன்?
அவர் கட்சியே காணாமல் போய் விடும்.
No comments:
Post a Comment