Wednesday, February 7, 2024

ஆட்டுக்காரன் அல்லக்கைகளோட காமெடி செம

 


ஆட்டுக்காரன் தட்டித் தூக்கிய முன்னாள் எம்.எல்.ஏ க்கள் என்று ஒரு பெரிய பட்டியலைப் போட்டு  அவனின் அல்லக்கைகள் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 யாரப்பா அந்த தலைவர்கள் என்று பார்த்தால் எல்லோரும் முன்னாள்கள். அந்த பட்டியலில் சில பெயர்கள் பரிச்சயமாக இருந்தன.

 


நான் திருக்காட்டுப்பள்ளியில் 1978- 82 ல் பள்ளியில் படிக்கும் நேரத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்த திருமதி கோமதி சீனுவாசன் அப்பட்டியலில் இருந்தார். பட்டியலில் அவர் பாலினத்தை மாற்றி விட்டது இன்னொரு கூத்து. கணவர்தான் வேட்பாளர், இவர் டம்மியாகத்தான் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கணவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் வேட்பாளராகி எம்.எல்.ஏ வும் ஆகி அமைச்சரும் ஆனார் என்பது இன்னொரு கதை. அப்போதே அவருக்கு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். அப்படியென்றால் இப்போது? கணக்கு போட்டுப் பாருங்கள்.

 

அப்புறம் பொள்ளாச்சி ரத்தினம். இவரும் எம்.ஜி.ஆர் காலத்து எம்.எல்.ஏ. அப்படியொன்றும் சின்ன வயசில எம்.எல்.ஏ ஆனவரில்லை. இவர் தயாரித்த உறவைக் காத்த கிளி படத்தின் போதுதான் இவருக்கும் டி.ராஜேந்தருக்கும் சண்டை வந்து எம்.ஜி.ஆர் டி.ஆரை ராமபுரம் தோட்டத்திற்கு அழைத்து பாசத்துடன் கவனித்தார் என்பது அந்த கால பரபரப்புச் செய்தி. எம்.ஜி.ஆர் இறந்தே 36 வருடங்களாகி விட்டதென்றால் இப்போது இவருக்கு என்ன வயது?

 சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி டாக்டர் குழந்தைவேலுவின் பெயரும் உள்ளது. நாங்கள் 1982 க்கு நெய்வேலிக்கு குடியேறிய போது அவர்தான் எம்.பி. அவர் 1980 ல் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. 1984 தேர்தலில் தோற்றுப் போய் அதற்கு பின்பு மருத்துவத்தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்.  அவர் வயதையும் கணக்கு போட்டு போருங்கள்.

 மற்றவர்களின் பெயர்கள் எல்லாம் அப்படி எம்.எல்.ஏ க்கள் இருந்தார்களா என்று கேட்க வைக்கும் அளவில்தான் உள்ளது.

 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஆட்டுக்காரன் தட்டித் தூக்கிய பிரபலங்களின் தன்மை இதுதான். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று முதுமையின் முற்றிய கட்டத்தில் இருப்பவர்கள். இந்த பேர்வழிகள் பாஜகவில் இணைந்ததால் அக்கட்சிக்கும் பிரயோசனம் இல்லை. பாஜகவில் இணைந்ததால் அவர்களுக்கும் பிரயோசனம் இல்லை, இணையும் போது போட்ட சால்வையைத் தவிர.

 இதையெல்லாம் சாதனை என்று பீற்றிக் கொண்டு தம்பட்டமடிக்க ஆட்டுக்காரனின் அல்லக்கை சங்கிகளால் மட்டும் முடியும்.

1 comment:

  1. கட்சியில் பல அணி இருக்கும், அந்த வகையில் இது புதிதாக உருவாக்கப்படும் அணி " வாக்கு சாவடிக்கு வந்து வாக்கு செலுத்த முடியாதவர்கள் அணி "

    ReplyDelete