ஆட்டுக்காரன் தட்டித் தூக்கிய முன்னாள் எம்.எல்.ஏ க்கள் என்று ஒரு பெரிய பட்டியலைப் போட்டு அவனின் அல்லக்கைகள் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான்
திருக்காட்டுப்பள்ளியில் 1978- 82 ல் பள்ளியில் படிக்கும் நேரத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில்
அமைச்சராக இருந்த திருமதி கோமதி சீனுவாசன் அப்பட்டியலில் இருந்தார். பட்டியலில் அவர்
பாலினத்தை மாற்றி விட்டது இன்னொரு கூத்து. கணவர்தான் வேட்பாளர், இவர் டம்மியாகத்தான்
வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கணவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் வேட்பாளராகி
எம்.எல்.ஏ வும் ஆகி அமைச்சரும் ஆனார் என்பது இன்னொரு கதை. அப்போதே அவருக்கு நாற்பது
வயதுக்கு மேல் இருக்கும். அப்படியென்றால் இப்போது? கணக்கு போட்டுப் பாருங்கள்.
அப்புறம்
பொள்ளாச்சி ரத்தினம். இவரும் எம்.ஜி.ஆர் காலத்து எம்.எல்.ஏ. அப்படியொன்றும் சின்ன வயசில
எம்.எல்.ஏ ஆனவரில்லை. இவர் தயாரித்த உறவைக் காத்த கிளி படத்தின் போதுதான் இவருக்கும் டி.ராஜேந்தருக்கும் சண்டை வந்து எம்.ஜி.ஆர் டி.ஆரை ராமபுரம் தோட்டத்திற்கு அழைத்து பாசத்துடன் கவனித்தார் என்பது அந்த கால பரபரப்புச் செய்தி. எம்.ஜி.ஆர் இறந்தே 36 வருடங்களாகி விட்டதென்றால் இப்போது இவருக்கு
என்ன வயது?
கட்சியில் பல அணி இருக்கும், அந்த வகையில் இது புதிதாக உருவாக்கப்படும் அணி " வாக்கு சாவடிக்கு வந்து வாக்கு செலுத்த முடியாதவர்கள் அணி "
ReplyDelete