Sunday, February 4, 2024

பாவத்தின் சம்பளம் பாரத ரத்னா

 


பாரத ரத்னா விருது இன்னொரு முறை அசிங்கப்பட்டிருக்கிறது. மத வெறி, விஷப்பிரச்சாரர்களின் முன்னோடி அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை சென்று சிறுபான்மை மக்களுக்கு எதிராக நச்சைக் கக்கி, கலவரங்களை தூண்டி ஆயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தை குடித்த படுபாவிதான் அத்வானி.

குஜராத்தில் டிமோ ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்த போது, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகி வாஜ்பாய் கூட "நான் எந்த முகத்துடன் வெளிநாட்டுக்கு போவேன்?" என்று புலம்பிய போது கூட டிமோவின் பதவியை பாதுகாத்துக் கொடுத்த கொடூரனே அத்வானி.

இந்தியாவின் மோசமான பிரிவினைவாதிகள் பட்டியலில் டிமோ வரும் வரை முதலிடத்தில் இருந்த அத்வானி, பாரத ரத்னா என்பதெல்லாம் இந்தியாவிற்கே இழிவு.

அயோத்தி கோயிலுக்கு அத்வானி அழைக்கப்படவில்லை. அவர் வந்தால் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விடும் என்பது டிமோ கணக்கு. அதனால் உருவான சின்ன விமர்சனத்தை சரி செய்ய டிமோ செய்த அரசியலே அத்வானிக்கு தூக்கி போடப்படும் இந்த எலும்புத்துண்டு. 

உண்மையிலேயே இந்த விருதை அவருக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், நிதிஷ்குமாரை இழுக்க பீகாரின் கற்பூரி தாகூருக்கு இறந்து 36 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டபோதே அத்வானிக்கு அறிவித்திருக்கலாமே!

பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்வார்கள்.

ஆனால் இங்கே 

பாவத்திற்கு சம்பளமாக பாரத ரத்னா தரப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Ini thoda kalavarangalin vegumathiyya bharat rathna thigazhum.

    ReplyDelete