Wednesday, December 11, 2024

துணை ஜனாதிபதிக்கு வெ.மா.ரோ.சூ.சொ இருந்தால்?

 


இந்திய ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம் மோடி பிரதமராக இருப்பது மட்டுமல்ல. ரௌடி கவர்னராக இருந்த ஜகதீப் தன்கர்  இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருப்பதும் கூடத்தான்.

அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்தும் மாநிலங்களவை தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி க்கள் மாநிலங்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தீக்கதிர் செய்தியில் முழுமையாக உள்ளது.

ஜகதீப் தன்கர்  வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள மனிதராக இருந்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்திடுவார்.

ஆனால் சங்கிகளுக்குத்தான் அப்படிப்பட்ட எதுவும் கிடையாதே! அதனால் பதவியில் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்.

 

ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தாக்கல்

 

புதுதில்லி, டிச. 10 - நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதி ராக, அரசியலமைப்புப் பிரிவு 67(பி)-ன் கீழ், இந்தியா கூட்டணி கட்சி கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளன. 

அதானி முறைகேடு குறித்த விவா தத்திற்கும், எதிர்க்கட்சிகள் அளிக் கும் நோட்டீஸ்களுக்கும் மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து அனுமதி மறுத்து வரு கிறார். அதேவேளையில், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ்  சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி, அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸ்களுக்கு வேகவேகமாக அனுமதி அளித்துள்ளார். 

இவ்வாறு, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால், அவர் அவைத் தலைவராக நீடிக்கத் தகுதியில்லை என்று கூறி எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இதில், காங்கிரஸ், திமுக, ராஷ்டி ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீ சை தாக்கல் செய்துள்ளனர்.

 

அதானி ஊழலை மூடிமறைக்க முயற்சி

இந்தியாவில் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய  மின்சக்தியை வாங்க பல் வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் 2,039 கோடி ரூபாய்) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்க முதலீட்டாளர்களிடம் அதானி ரூ. 6,300 கோடி மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் அதானியைக் கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் நட வடிக்கை எடுக்க வேண்டும், ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மணிப்பூர் மாநில வன்முறை மற்றும் சம்பல் பகுதி மசூதி விவகாரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், மோடி அரசு அதனை ஏற்பதாக இல்லை. நாடாளுமன்றமே முடங்கினாலும், அதானிக்கு எதிராகஎந்த நடவடிக்கையும் எடுக்கமாட் டோம் என்று பிடிவாதமாகஉள்ளது.

11 நாட்களாக தொடரும் போராட்டம்

இந்நிலையில், செவ்வாயன்று (டிச.10) பதினொன்றாவது நாளாக நாடாளுமன்றம் கூடியது. அப்போது இரு அவைகளிலும் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி உள்ளிட்ட விவகாரங்களை விவா திக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். 

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க் களின் நோட்டீஸ்கள் எதையுமே ஏற்க  முடியாது என்று அவைகளின் தலை வர்கள் தள்ளுபடி செய்தனர்.

இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் முழக்கங் களை எழுப்பவே, பகல் 12 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டன. இதனால் 11-ஆவது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இதனிடையே தான், மாநிலங் ளவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்களை அளித்துள்ளனர்.

 

பாரபட்சமான நடவடிக்கைகள்

மாநிலங்களவைத் தலைவராக இருக்கும் ஒருவர் யாருக்கும் ஆதர வாக இருக்கக்கூடாது என்ற போதி லும் தன்கர் எப்போதும் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு சாதகமாக இருப்பதுடன், அவர்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டு வதை வாடிக்கையாக வைத்துள் ளார் என்பது நீண்டகால குற்றச் சாட்டாகும். எதிர்க்கட்சி எம்.பி,க்கள் பேசும்போது வேண்டுமென்றே குறுக்கீடு செய்வது; தடுத்து நிறுத்து வது, போதிய நேரம் வழங்காதது, என்று ஜகதீப் தன்கரின் பேச்சுக் கள், நடவடிக்கைகள் எதேச்சதிகார மாகவும் அராஜகமான முறையிலும் உள்ளன என்று ஏற்கெனவே புகார்கள் உள்ளன. 

 

மாநிலங்களவை விதிகளையும் மீறுகிறார்

எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்திருக்கும் போது அவரை பேச  அனுமதிக்க வேண்டும் என்பது மாநி லங்களவையின் விதியாகும். ஆனால், காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லி கார்ஜூன கார்கே பேசுவதற்கு அனுமதி மறுப்பதுடன், வேண்டு மென்றே அவரது ஒலிவாங்கி அணைக்கப்படுகிறது. இதுதவிர, ஒரு எம்.பி. தனது பேச்சில் மற்ற வர்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக் கள் கூறக்கூடாது என்று மாநிலங்கள வையின் விதி 238(2) தெளிவுபடுத்து கிறது. இந்த விதி மாநிலங்களவை யின் தலைவருக்குமே பொருந்தக் கூடியது தான். ஆனால், மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சில எம்.பி.க்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்துகளைக் கூறுவதாக கூறப்படுகிறது.

பல்வேறு பிரச்சனைகள் தொடர் பாக எதிர்க்கட்சிகள் அளிக்கும் நோட்டீஸ்களில் ஒன்றைக்கூட விவாதத்திற்கு எடுக்க மறுப்பதுடன், அவற்றை மொத்தம் மொத்தமாக தள்ளுபடி செய்வதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுமாக உள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

அந்த வகையில் அதானியின் ஊழல் பற்றி விவாதத்திற்கு 11 நாட் களாக அனுமதி மறுத்துவரும் மாநி லங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், தற்போது அமெரிக்கத் தொழி லதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்ப தாக பாஜக உறுப்பினர்கள் அளித்த நோட்டீஸ்களை மட்டும் வேகமாக விவாதத்திற்கு எடுத்துள்ளார்.

எனவே தான், மாநிலங்களவைத் தலைவரின் பாரபட்சத்தைக் கண்டித்து, அவருக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்களை எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் அளித்துள்ளனர்.

 

மோடி - அதானி உருவம் பதித்த பைகளுடன் எம்.பி.க்கள் போராட்டம்!

அதானி, மணிப்பூர், சம்பல் விவ காரங்களை விவாதிக்க மறுக்கும் ஒன்றிய மோடி அரசின் பிடிவாதத்தை கண்டித்து, செவ்வாயன்று 6-ஆவது நாளாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நன்றி - தீக்கதிர் 11.12.2024

2 comments:

  1. என்ன இருந்தாலும் அவர் துணை ஜனாதிபதி. இப்படி பேசலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதியாக இருந்த போது அவரது மதம் காரணமாக மட்டும் அனைத்து காவிக்க்யவர்களும், மந்திரிகள் உள்ளிட்ட மந்திகள் வரை அவரை இழிவு படுத்தினார்கள். நான் உண்மையைத்தான் எழுதியுள்ளேன்

      Delete