Friday, December 20, 2024

A 1 ஜெ பாணியா மோடி?

 


சைக்கிள் சாரங்கியை கீழே தள்ளி விட்டு மண்டைய உடைத்த காதை மட்டும் போதாது என்பதால்     ராகுல் காந்தியை பழி வாங்க அல்லது அவர் மீது அவதூறு பரப்ப மோடி இன்னொரு ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளார். அது கேவலமான, கீழ்த்தரமான உத்தி. ஜெயலலிதா பயன்படுத்திய அதே உத்தி.

ஆளுனர் சென்னாரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டசபையில் ஜெ சொன்னது நினைவில் உள்ளதல்லவா! அதே உத்தியை மோடியும் பயன்படுத்தி விட்டார்.

நாகாலாந்து மாநிலத்தின் பெண் எம்.பி யின் மூலமாக ராகுல் காந்தி மீது ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

ராகுல் காந்தி தனக்கு அருகாமையில் நின்று சத்தமாக ஏதோ பேசினார். அதனால் எனக்கு வசதிக்குறைவாக (Uncomfortable) இருந்தது என்பது அவர் குற்றச்சாட்டாக நாடாளுமன்றத்தில் சொன்னதாக  முதலில் செய்திகள் வந்தது.

அதன் பிறகு பார்த்தால் ராகுல் காந்தி ஏதோ அந்த பெண்மணியை பாலியல் சீண்டல் / கொடுமைக்கு  உள்ளாக்கியது போல சங்கிகள் ராகுல் காந்தியை ஒரு காமக் கொடூரன் ரேஞ்சில் அவதூறு செய்யத் தொடங்கி விட்டனர். ட்விட்டர் தளம் முழுதும் ராகுல் காந்தியை ஒரு பெண் வெறியனாக சித்தரிக்கும் பதிவுகள்தான்.

 “பழங்குடி பெண் எம்.பி யை இழிவு படுத்திய ராகுல் காந்தி” என்ற  இந்த அவதூறுப் பிரச்சாரத்தை பார்க்கையில்  அது பொய்யானதாகவே தோன்றுகிறது.

எப்போது அர்ஜூனன் போல மோடியும் சிகண்டியை முன்வைத்து ராகுல் காந்தியோடு மோத வந்தாரோ, அப்போது அவர் தரப்பில் நியாயம், தர்மம், நேர்மை, நாணயம் என்று எதுவுமே இல்லை என்பது அம்பலமாகி விட்டது.

No comments:

Post a Comment