Friday, January 23, 2026

நீதிபதியிடம் சில கேள்விகள்

 


சனாதன ஒழிப்பு என்றால் சனாதனத்தை பின்பற்றும் அனைவரையும் கொன்று விடுவது என்று புதிய அர்த்தம் சொல்லியுள்ள நீதியரசியால் என்னுடைய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியுமா?

"காங்கிரஸ் முக்த் பாரத்" என்பதை பாஜக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இலக்கு என்று சொல்கிறது. அப்படியென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் கொன்று விட திட்டமிட்டுள்ளது என்று சொல்லலாமா?

கழகங்கள் அற்ற தமிழகம் என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டு பாஜக சொல்லிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால் திமுக மற்றும் இப்போது பாஜகவின் அடிமையாக மாறியுள்ள அதிமுக ஆகிய இரண்டு கட்சி உறுப்பினர்களையும் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக சொன்னதா?

சனாதனம் என்பது ஒரு கருத்தியல்.  பிறப்பில் வேற்றுமை கற்பிக்கிற பிற்போக்குக் கருத்தியல், பெண்களை அடிமைகளாக அடக்கியாள துடிக்கும் கருத்தியல், மாற்று மதங்களுக்கு எதிரான கருத்தியல்.

சனாதனம் என்ற கருத்தியலை ஒழிப்போம் என்றால் அதனை சனாதனத்தை பின்பற்றுபவர்களை ஒழிப்பது என்ற புனிதமான புரிதல் உங்களுக்கு எந்த போதிமரம் கொடுத்தது?

உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் கோட்பாடுகளை உருவாக்கிய கோல்வால்கரின் படி திரிசூலத்தின் மூன்று முனைகள் அழிக்க வேண்டியவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எழுதியே வைத்துள்ளார் என்று.

அவரது சடலத்தை தோண்டி எடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா? 

3 comments:

  1. ஆர் எஸ் எஸ் நீதிபதியிடம் வேற எதையும் எதிர்பார்க்க முடியாது இந்த சங்கிகளுக்கு மக்கள் மன்றமே பதிலடி

    ReplyDelete
  2. https://www.dinamalar.com/weekly/sinthanai-kalam/why-is-the-ideology-of-the-communists-fading-in-our-country/4133655

    ReplyDelete
    Replies
    1. அபத்தமான, முட்டாள்தனமான, பொய்ப் பிரச்சாரம். சங்கிகள் என்றைக்கு உண்மையை சொல்லியுள்ளார்கள்!

      Delete