மோடி நூறு மணி நேரம் வேலை பார்க்கிறாரா?
உழைப்புச் சுரண்டலை வெட்கமில்லாமல் உபதேசிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மோடியை வேறு துணைக்கு இழுக்கிறார்.
மோடி ஒரு வாரத்திற்கு நூறு மணி நேரம் உழைக்கிறாராம். அது போல ஒவ்வொருவரும் நூறு மணி நேரம் உழைப்பதுதான் மோடிக்கு செய்யும் மரியாதையாம்.
அப்படி என்ன மோடி நூறு மணி நேரம் உழைத்து கிழித்து விட்டார்?
தேர்தல் வந்து விட்டால் மட்டும் மோடி ரொம்பவே பிஸியாகி விடுவார். பறந்து பறந்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பொய்யையும் மத வெறி விஷத்தையும் கலந்து கலந்து அடிச்சு விடுவார். அதை அவர் பிரதமராக வேலை பார்ப்பது என்று சொல்ல முடியாது.
அடுத்து வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டே இருப்பார். அந்த நாட்டு தலைவர்களோடு விதம் விதமான உடைகளில் போட்டோ செஷன் நடத்திக் கொண்டிருப்பார். அவற்றை எல்லாம் வேலை என்றா சொல்வீர்கள்!
மோடி உடை மாற்றுவதை ஒரு நாளில் நான்கு முறை செய்வார். அதெல்லாம் வேலை என்ற கணக்கில் வருமா என்ன?
ட்விட்டரைப் பார்த்தால் ஒரு நாளைக்கு இருபது பதிவுகளாவது போட்டிருப்பார். அதெல்லாம் அவர் அட்மின் போடுவது. மோடி செய்யும் வேலை என்றா சொல்ல முடியுமா?
பிரதமரின் வேலை என்பது பிரதமர் அலுவலகம் சென்று கோப்புக்களை பார்ப்பது, நாடாளுமன்றம் சென்று விவாதங்களில் கலந்து கொண்டு உரிய விளக்கம் அளிப்பது.
இவையெல்லாம் எதுவும் செய்யாத மோடி நூறு மணி நேரம் உழைக்கிறார் என்று நாராயணமூர்த்தி சொன்னால் அதை ஏற்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டுமா?
அப்படியே ஏதாவது சொற்ப நேரம் வேலை பார்த்தால் அதுவும் அதானி, அம்பானிக்கு எதையாவது தாரை வார்ப்பதற்காகத்தான் இருக்கும்.
அதனால் மோடியை ஒரு போதும் மதிக்க முடியாது. மரியாதை கொடுக்க முடியாது. திட்ட வேண்டுமென்றால் திட்டலாம்.
இந்தியாவின்
தண்டப் பிரதமர்,
ஃபிராடு
பிரதமர்,
புரோக்கர்
பிரதமர்.
வேஸ்டு
பிரதமர்,
மத
வெறி பிரதமர்,
பொய் சொல்லி பிரதமர்,
கொலைகார
பிரதமர்.
என்ன நாராயணமூர்த்தி மோடிக்கு இந்த மரியாதை போதுமா?
நல்ல பதிவு. மகிழ்ச்சி.
ReplyDelete