Thursday, May 9, 2024

ஆப்பிரிக்கான்னா அசிங்கமா மோடி?

 


காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா கூறியதில் எந்த தவறும் இல்லை. நிறங்களில், உருவ அமைப்புக்களில் வேறுபாடு இருந்தாலும் நாம் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதே. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் அதன் அர்த்தம். சங்கி தருண் விஜய் பேசியதுதான் நிற வெறியின் வெளிப்பாடு . . .

ஒற்றுமை என்ற வார்த்தையே அயோக்கிய நாய்களுக்கு பிடிக்காதே! அதனால்தான் குரைக்க ஆரம்பித்து விட்டன. நாய்களை கல்லைக் கொண்டு அடிப்பதற்கு பதிலாக சாம் பிட்ரோடா  பதவியை விட்டு விலகி ஒதுங்கி விட்டார். விலகியது கூட சரியென்பேன். ஆனால் ஒதுங்காமல் சங்கிகளை உதைக்க வேண்டும்.

சாம் பிட்ரோடா  தமிழர்களை ஆப்பிரிக்கர்களோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தி விட்டார் என்று மட சங்கிகள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரதம முட்டாள் கூட மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டுள்ளார்.

என் கேள்வி எளிதானது.

ஏன்யா மோடி.

அப்படி என்ன நீங்க எல்லாம் ஒஸ்தி? ஆப்பிரிக்கர்கள் எல்லாம் மட்டம்?
சொகுசுப் பேர்வழியே. ஆப்பிரிக்கர்களின் உழைப்பில் கொஞ்சமாவது உழைக்க உன்னால் முடியுமா? 
ஆப்பிரிக்கர்கள் அசிங்கம் என்ற நினைப்பிருந்தால் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களை எல்லாம் எப்படி மதித்திருப்பாய்?
ஒபாமாவுக்கு டீ போட்டு கொடுத்து  டிராமா போட்டியே, ஆப்பிரிக்க அமெரிக்கரான அவருக்கு கொடுத்த டீயில எதை கலந்து கொடுத்தாய்? சர்க்கரையையா? வெறுப்பையா?

உன் மானம் உலகெங்கும் பறக்குது. அதை மடை மாற்ற தமிழர்களை உசுப்பேத்தறயா உருப்படாத ஜந்துவே! 

No comments:

Post a Comment