நாளைக்குள் தேர்தல் பத்திர விபரங்களை ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டுமென நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஸ்டேட் வங்கி நேற்று மாலை ஒப்படைத்து விட்டது.
ஆக விபரங்கள் அதனிடம் தயாராகத்தான் இருந்திருக்கிறது. மோடி, அதானி, அம்பானி வகையறாக்களின் தில்லுமுல்லு அம்பலமாகக்கூடாது என்பதற்காகத்தான் அவகாசம் கேட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகி விட்டது.
நீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்ற நினைத்தமைக்கே ஸ்டேட் வங்கியின் சேர்மன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்தி சிறையில் தள்ள வேண்டும்.
பிகு: தேர்தல் ஆணையம் நீதிமன்றம் சொன்னபடி 15ம் தேதி தனது இணைய தளத்தில் விபரங்களை பகிர்ந்தால்தான் ஸ்டேட் வங்கி சரியான தகவல்களை அளித்துள்ளதா இல்லை மோசடி செய்துள்ளதா என்பது தெரிய வரும் என்பது இன்னொரு கதை.
No comments:
Post a Comment