முன்பெல்லாம் திருமண மேடைகளில் அதற்கு பொருத்தமின்றி, அவசியமின்றி அரசியல் பேசுகிறார்கள் என்று சொல்வார்கள்.
இப்போது ஆட்டுத்தாடி ரவி செய்வதும் அதே போன்றதுதான்.
தெலுங்கானா மாநிலம் தொடர்பான விழாவில் எந்த ஒரு மாநிலத்துக்கும் என்று தனியான அடையாளமோ, கலாச்சாரமோ கிடையாது என்று பிதற்றி உள்ளார். தமிழன் என்றெல்லாம் பெருமை பேசாதே என்பதுதான் அந்த உரையின் நோக்கம். இந்தியாவின் சிறப்பே அதன் பன்முகத்தன்மைதான். அதை மறந்து பேசுகிறது இந்த ஜென்மம்.
அடுத்து துணை வேந்தர்கள் மாநாடு. இணை வேந்தராக இருக்கிற உயர் கல்வித்துறை அமைச்சர் இல்லாமல், அவருக்கு தகவலே சொல்லாமல் இவர் மாநாடு நடத்துவதே தவிர. அதில் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் “தொழிலதிபர்களை சென்று பார்ப்பதாலோ அல்லது பேசுவதாலோ அல்லது அழைப்பு விடுப்பதாலோ மூதலீடு வராது” என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு நக்கல் பேச்சு.தொழிலதிபர்களை பார்க்க ஜப்பான் போன முதலமைச்சரை வெறுப்பேற்றுவதுதான் இதன் நோக்கம்.
மொத்தத்தில் திமுக உறுப்பினர்களை உசுப்பேற்றி தன் மீது ஒரு தாக்குதலை நடத்த வைக்க வேண்டும், அதை காரணம் காட்டி அரசை கலைக்க வேண்டும் என்ற தெளிவான செயல் திட்டத்தோடுதான் ஆட்டுத்தாடி காய் நகர்த்துகிறது.
திமுக தொண்டர்கள் சுதாரிப்பாக இல்லாவிட்டால், ஆட்டுத்தாடியின் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தாவிட்டால் அது நினைத்தது நடக்கும்.
No comments:
Post a Comment