தோழர் இ.பா.சிந்தன் ஆரம்பித்தார்.
இன்னும் பல தோழர்களும் தொடர்ந்தார்கள்.
என்னாலும் ஆவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
நானும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
ஆம். ஜனவரி தொடங்கி ஜூன் வரை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் படித்த நூல்களின் பட்டியலை அவர் முகநூலில் பகிர்ந்து கொள்ள, மற்ற சில தோழர்களும் தொடர, நானும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.
நேற்று வரை படித்து முடித்த நூல்களின் பட்டியல் இது. ஏழு தினங்கள் அதிகரித்ததால் இரண்டு நூல்களும் கூட அதிகரித்துள்ளது.
படிக்கும் நூல்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ளும் பழக்கத்திற்கு முன்னோடியான தோழர் ச.சுப்பாராவிற்கு நன்றி.
படித்ததை விட படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் இன்னும் அதிகம். பார்ப்போம், ஆண்டு முடிவதற்குள் அந்த பட்டியலின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
நம்பிக்கையோடுதானே வாழ்க்கையில் அனைத்தையும் அணுக வேண்டியுள்ளது !!!!
| எண் | தலைப்பு | ஆசிரியர் | பக்கம் |
| 1 | தனிமையின் வீட்டிற்கு | எஸ்.ராமகிருஷ்ணன் | 158 |
| நூறு ஜன்னல்கள் | |||
| 2 | காட்சிகளுக்கு அப்பால் | எஸ்.ராமகிருஷ்ணன் | 80 |
| 3 | பலூன் | ஞானி | 96 |
| 4 | கபாடபுரம் | நா.பார்த்தசாரதி | 210 |
| 5 | மாயக்குதிரை | தமிழ்நதி | 168 |
| 6 | மிளிர் கல் | இரா.முருகவேள் | 270 |
| 7 | சொற்களைத் தேடும் | ச.சுப்பாராவ் | 96 |
| இடையறாத பயணம் | |||
| 8 | சிவந்த கைகள் | சுஜாதா | 136 |
| 9 | மூன்று நாள் சொர்க்கம் | சுஜாதா | 104 |
| 10 | 6961 | சுஜாதா | 72 |
| 11 | ஓரிரவு ஒரு ரயிலில் | சுஜாதா | 46 |
| 12 | குறத்தியம்மன் | மீனா கந்தசாமி | 234 |
| தமிழில் பிரேம் | |||
| 13 | ரத்தினக்கல் | சத்யஜித்ரே | 48 |
| தமிழில் வீ.பா.கணேசன் | |||
| 14 | வேதபுரத்தார்க்கு | கி.ராஜநாராயணன் | 184 |
| 15 | பக்கத்தில் வந்த அப்பா | ச.தமிழ்ச்செல்வன் | 160 |
| 16 | பத்துக் கிலோ ஞானம் | இரா.எட்வின் | 92 |
| 17 | வெட்டாட்டம் | ஷான் | 266 |
| 18 | ஊழல் உளவு அரசியல் | சவுக்கு சங்கர் | 223 |
| 19 | எட்டு கதைகள் | ராஜேந்திரசோழன் | 96 |
| 20 | வைகை நதி நாகரீகம் | சு.வெங்கடேசன் | 151 |
| 29 | உழைப்போரின் உரிமைக் | கே.பி.ஜானகியம்மாள் | 47 |
| குரலாய் | |||
| 30 | பெண்களும் சமூக நீதியும் | பேரா.சோ.மோகனா | 32 |
| 31 | மீரட் சதிவழக்கு | முசாபர் அகமது | 24 |
| 32 | சேரமான் காதலி | கண்ணதாசன் | 680 |
| 33 | பிரியங்கா நளினி சந்திப்பு | பா.ஏகலைவன் | 610 |
| 34 | செம்புலம் | இரா.முருகவேள் | 320 |
| 35 | கீழைத்தீ | பாட்டாளி | 352 |
| 36 | வாங்க சினிமாவைப் பற்றி | கே.பாக்யராஜ் | 142 |
| 37 | போய் வருகிறேன் | கண்ணதாசன் | 240 |
| 38 | நினைவுகளில் என் இனிய | பி.ஸ்ரீரேகா - தமிழில் | 64 |
| தோழர் ஈ.கே.நாயனார் | மு.சுப்ரமணி | ||
| 39 | தோழர்கள் | மு.இராமசுவாமி | 80 |
| 40 | முதல் மதிப்பெண் எடுக்க | நா.முத்துநிலவன் | 166 |
| வேண்டாம் மகளே | |||
| 41 | ஏழரைப்பங்காளி வகையறா | எஸ் . அர்ஷியா | 372 |
| 42 | கர்ப்ப நிலம் | குணா. கவியழகன் | 336 |
| 43 | அரசு ஊழியர் இயக்க | நெ.இல.சீதரன் | 560 |
| வரலாற்றில் M.R.அப்பன் | |||
| 44 | ஆயுத எழுத்து | சாத்திரி | 375 |
| 45 | நிறங்களின் உலகம் | தேனி சீருடையான் | 303 |
| 46 | எழுதலை நகரம் | எஸ்.ராமகிருஷ்ணன் | 174 |
| 47 | மூக்குத்தி காசி | புலியூர் முருகேசன் | 176 |
| 48 | வழக்கு எண் 1215/2015 | வீ.பா.கணேசன் | 160 |
| 49 | இன்குலாப் ஜிந்தாபாத் | அறந்தை நாராயணன் | 170 |
| 50 | வியட்னாம் காந்தி | வெ.ஜீவானந்தம் | 110 |
| 51 | காந்தள் நாட்கள் | இன்குலாப் | 142 |
| 52 | ஸ்னோலின் நாட்குறிப்புகள் | வெனிஸ்டா ஸ்னோலின் | 32 |
| 53 | ஜிகாதி | ஹெ.ஜி.ரசூல் | 120 |
| 54 | இந்திய சுதந்திரப் போரும் | பி.ஆர்.பரமேஸ்வரன் | 63 |
| கப்பற்படை எழுச்சியும் | |||
| 55 | அப்போதும் கடல் | எஸ்.ராமகிருஷ்ணன் | 174 |
| 56 | தப்பாட்டம் | சோலை சுந்தரப்பெருமாள் | 318 |
| 9232 |

SUPER BOOKS
ReplyDeleteஜெயமோகன் புத்தகங்கள் படிப்பதில்லையா? மறந்தும் அவாள்கள் இந்நாட்டிற்கு செய்த அநீதிகளை எந்த அறத்திலும் எழுத மாட்டார் என்பதாலா?
ReplyDeleteசொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதில்லை. ஜெமோ நூல் வாங்கி என் பணத்தை விரயம் செய்வதில்லை
Delete