கீழே உள்ள செய்தி நேற்று முதல் வாட்ஸப்பில் வேகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வலம் வந்து கொண்டிருக்கிற செய்தி.
இதே செய்தி கடந்த வருடம் மோடி சொன்னதாக வலம் வந்தது. இதையெல்லாம் சொல்லும் அருகதை மோடிக்கு உண்டா என ஒரு பதிவு எழுதியது நினைவுக்கு வருகிறது.
ஆறு மாதம் முன்பு இதே செய்தி அரவிந்த் கேஜ்ரிவால் சொன்னதாக வலம் வந்தது.
இப்போது தோழர் பினராயி விஜயன் சொன்னதாக சொல்கிறார்கள். 
செய்தி என்னவோ நல்லதுதான். ஆனால் இதை முன்னிறுத்த ஏன் தவறான வழியை பின்பற்ற வேண்டும்? முன்பு மோடி பெயரிலும் கேஜ்ரிவால் பெயரிலும் வந்ததாக சொல்லப்பட்டதை பகிர்ந்து கொண்டவர்களே இப்போதும் பகிர்ந்து கொள்கிறார்கள். செய்தியை முந்தித்தரும் தொலைக்காட்சி ஊடகமாக தங்களை கருதிக் கொள்பவர்கள் அதிகரித்ததால் வருகிற வினை இது. 
இதன் மூலம் தங்களுடைய நம்பகத்தன்மையும் சிதைந்து போகிறது என்பதை உணர மறுக்கிறார்கள். பாவம்!!!!
👌👌👇 மாண்புமிகு  கேரளா மாநில முதல்வர் பிரணாயிவிஜயன்  நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி .....👌👌👇 
💪💪
 இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள்
 தினசரி  அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக  !!!!!!
💪💪
 நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் 
நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் 
சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
💪💪
 நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் 
நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை 
கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள்
 நாம் பழச்சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் 
கொடுக்கும்.  
💪💪
 10 அல்லது 20 ருபாய் வரை கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் 10 அல்லது 5 
ருபாய் வரை கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் 
நிதி வலுவடையும்  
💪💪 இந்த செய்தியை குறைந்தது 3 குருப்புக்கு அல்லது 10 பேருக்கு அனுப்பவும் 
கோகோ
 கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, 
நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், 
நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் 
💪💪
 நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் 
வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் 
இரண்டாவது பணக்கார நாடாகமாறும். 
💪💪
 வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு சமமாக இருக்கும். நாம் 
அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை 
என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். 
💪💪
 நாம் எவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் 
பகிர்ந்துகொள்கிறோம் அதுபோல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி 
அனுப்புவோம் 
👌👆💪💪💪
இதை விட இன்னொரு கொடுமை உண்டு. அதை நாளை சொல்கிறேன்
 
இதை விட இன்னொரு கொடுமை உண்டு. அதை நாளை சொல்கிறேன்

 
 
hi
ReplyDeleteஹலோ நண்பர்கள் நான் தமிழ்நாடு, Kerla மற்றும் கர்நாடக நகரத்தில் இருந்து மிகவும் நல்ல செய்தி இருக்கிறது என்று ஒரு செய்தி பயன்பாடு உள்ளது.
ReplyDeleteஅதன் மிக எளிதாக தூ பயன்பாடு மற்றும் பங்கு மேலும் நல்ல செய்தி உள்ளடக்க, உங்கள் அனைவரையும் கொண்டு அந்த விண்ணப்பத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Thankyu.