தண்ணீருக்கான பிரச்சினை கண்ணீரை வரவழைக்கிறது. மூன்றாம் உலகப் போர் என்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுவது உண்மையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நாகரீங்கள் நதிக்கரைகளில் வளர்ந்தது என்று சொல்லப்படுகிறது. நதியை முன்வைத்து நாகரீகங்கள் இன்று மறைந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் விவசாயத்துக்கான ஜீவ நாடியாக. வாழ்வதற்கான அடிப்படையாக இருந்தவரை பிரச்சினையில்லை. அரசியல் நடத்துவதற்கான ஆதாரமாக மாறியதன் பின்னேதான் அத்தனை பிரச்சினைகளும்.
கலவரங்களை தூண்டி விடுவதில் அரசியல் ஆதாயம் உள்ளதென்றால் அதனை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதிலும் கூட அரசியல் உள்ளது.
இன்றைய சூழலையும் அதன் பின்னே உள்ள அரசியலையும் தோழர் ஸ்ரீரசா அவர்கள் பகிர்ந்து கொண்ட பல படங்கள் உணர்த்துகின்றன. நாம் புரிந்து கொள்ளவும், தீய சக்திகளை அம்பலப்படுத்தவும் இங்கே நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.









அருமையான கேள்வி, தர்மபுரியில் தமிழர்களின் குடிசைகளை எரித்தது கன்னடவெறியர்களா.
ReplyDelete