மிகச் சிறந்த அனுபவமாக வலைப்பதிவர் 
விழா இருக்கும் என்ற நம்பிக்கையில் புதுக்கோட்டை புறப்பட்டேன். ஆனால் 
புதுக்கோட்டை பயணமே ஒரு அனுபவமாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
முன்பதிவு
 செய்திருந்த பேருந்து ஒன்பது மணிக்குப் பதிலாக ஒன்பதரை மணிக்குத்தான் 
புறப்பட்டது. பேருந்து புறப்பட்டதும் முதல் சிக்கல் தொடங்கியது. 
"சார்
 கொஞ்சம் இடம் மாறி உட்கார்ந்து கொள்ளுங்களேன்" என்ற கோரிக்கையை ஏற்று இடம்
 மாறி அமர்ந்து கொண்டேன். முன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இருவர்,
 பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இருவர், பின் பக்கத்து இருக்கையில் 
அமர்ந்திருந்த இருவர் என ஆறு பேர் பேசிக் கொண்டே இருக்க அவர்களின் குரல், 
ஒலித்துக் கொண்டிருந்த பாடலையே அமுக்கியது. 
உங்களுக்கும் அந்த அவஸ்தை அனுபவத்தை கொடுக்கலாம் என்று அப்போது நான் பதிவு செய்ததை பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் நீங்கள் அதிர்ஷ்டம் நிறைய உள்ளவ்ரானதால் அந்த ஆடியோ கிளிப்பை இதில் இணைக்கவே முடியவில்லை. இது எல்லாம் இரவு பனிரெண்டு 
மணிக்கு. தூங்கவும் முடியாமல், இசையை ரசிக்கவும் முடியாமல் தலைவலியே வந்து 
விட்டது.
இதற்கு அடுத்த சிக்கல் வந்தது இரண்டு மணிக்கு.
இயற்கையின்
 அழைப்பிற்காக பேருந்து நின்றது. மற்ற பயணிகள் போல நானும் இறங்கி, மீண்டும்
 பேருந்தில் ஏறுவதற்குள் கண் முன்னாலாயே பேருந்து  புறப்பட்டு போய்க் 
கொண்டே இருந்தது. என் சத்தமோ, ஓட்டமோ அவர்கள் கவனத்திற்கு வரவேயில்லை. என் 
உடைகள் அடங்கிய பையோடு பேருந்து போய்க் கொண்டே இருந்தது.
ஆனாலும் கொஞ்சம் அதிர்ஷ்டம் எனக்கு இருந்திருந்தது.
நான்
 வந்த தனியார் பேருந்து கம்பெனியின் இன்னொரு பேருந்தும் அங்கே இருந்தது.  
அந்த பேருந்தின் ஓட்டுனரை அணுகியபோது அவர் நம்பிக்கை கொடுத்தார். என்னுடைய 
பேருந்து அந்த பேருந்தை முந்தி விடும். திருச்சியில் உங்களை அந்த 
பேருந்தில் ஏற்றி விடுகிறேன். உள்ளே இடமில்லை. முன் பக்கம் உட்காருங்கள் 
என்று சொல்லி ஏற்றிக் கொண்டார். 
"சார்,
 தூங்காம உட்கார்ந்து வாங்க" என்ற நிபந்தனை போட்டு விட  அதை ஏற்றுக் 
கொள்வதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது. பெரும்பாலான நேரம் அலைபேசியில் 
பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்ட சில நாட்கள் முன்பாக எழுதிய "ஒத்தக்கை 
ஓட்டுனர்கள்" பதிவுதான் மனதில் மிரட்டிக் கொண்டே இருந்தது. அவர் ஓவர்டேக் 
செய்யும் பேருந்துகளில் என்னை அம்போவென்று விட்டுச் சென்ற பேருந்து 
இருக்கிறதா என்று பார்ப்பதிலேயே  எழுபது கிலோ மீட்டர் பயணம் முடிந்தது.
ஸ்ரீரங்கத்தில்
 நான் வந்த பேருந்தை முந்தினார். திருச்சி பேருந்து நிலையத்தில் எனது பழைய 
பேருந்தில் ஏறிக் கொண்டேன். "ஏம்பா, உன்னிடம் சொல்லி விட்டுத்தானே நான் 
பேருந்தில் ஏறினேன்" என்று கிளீனரிடம் கேட்டால் அவரோ அலட்சியமாக பதில் 
சொல்ல, "கொஞ்சமாவது பொறுப்போடு இருங்க" என்று திட்டி விட்டு உள்ளே 
அமர்ந்தேன். 
திருச்சியைக்
 கடந்து பேருந்து ஓடிக் கொண்டிருக்க, இயற்கை உபாதைக்கு பேருந்தை 
நிறுத்துங்கள் என்று ஒரு சில பயணிகள் கேட்க, அந்த கோரிக்கை 
அலட்சியப்படுத்தப்பட்டது.  அதன் பின்னர் ஒரு பத்து பேருக்கு மேலாக ஓட்டுனரை
 முற்றுகையிட வேறு வழியில்லாமல் பேருந்து நிறுத்தப்பட்டது. 
அதன்
 பின்பு பேருந்து புறப்படும் முன்பாக ஒவ்வொரு சீட்டாக வந்த அந்த கிளீனர் 
எல்லோரும் ஏறி விட்டார்களா என்று கேட்டுக் கொண்டே வந்தார். நான் அவரை 
புன்னகையோடு பார்க்க, அவர் தலையை குனிந்து கொண்டே போய் விட்டார்.
அந்த பயம் - எனக்கு பிடிச்சிருக்கு.
பின்
 குறிப்பு: வலைப்பதிவர் விழாவைப் பற்றி எதுவும் எழுதவில்லையே என்ற கேள்வி 
என் காதிலும் விழுகிறது. ஒரு நாளில் ஒரு பதிவில் முடிகிற விஷயமா அது! 
நாளை முதல்  இந்த வாரம் - வலைப்பதிவர் விழா வாரம்
 
 
அனுபவம் தொடரட்டும்
ReplyDeleteThodarungal thodarkinren.
ReplyDeleteசிக்கலான அனுபவம் தான்.
ReplyDeleteஉண்மையிலேயே மறக்க இயலாத பயணம்தான் நண்பரே
ReplyDeleteதங்களை புதுகையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
நன்றி
ahaa payangkaramaana anupavamthan sir.
ReplyDeleteஉங்கள் வாரத்தை நாங்களே தொடங்கிவிட்டோம் நண்பரே! முதல்வரிசையில் உங்கள் படம்!
ReplyDeleteநன்றியுடன், நா.மு.-விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்.(ஆவலுடன் காத்திருக்கிறோம் நண்பா!)
ரொம்பவும் த்ரில்லிங்கான அனுபவம்தான்!
ReplyDeleteஉங்களைக்காணலியே என்று நானும் மற்றவர்களும் தேடிணோம். வரக்கானோமே என்று மதிய இடைவெளியிலும்தான் அப்புறம் பார்த்த பிறகுதான் தெரிந்தது. தாங்களும் ஓர் மாயாவிதானென்று...
ReplyDeleteதங்கள் அலைபேசி என்னை இழந்து விட்டதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மன்னிக்க..