இன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின்  அறைகூவல்படி
நாடெங்கும்  பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்  மறியல் 
போராட்டம் நடத்தி கைதாகி சிறை சென்றனர். அரசு ஊழியர்,
ஆசிரியர், வங்கி, இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல், அஞ்சல் 
ஊழியர் அமைப்புக்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி, பாரதீய ஜனதா கட்சியின்
பி.எம்.எஸ்  ஆகிய சங்கங்களும் இப்போராட்டத்தில்  
கலந்து கொண்டுள்ளனர். 
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, பொதுத்துறை 
நிறுவனங்களின் பங்குகளை விற்காதே  போன்ற 
கோரிக்கைகளை  முன் வைத்து இப்போராட்டம் 
நடந்துள்ளது.
மன்மோகன்சிங் மீது தொழிற்சங்க இயக்கம் கொண்டு 
வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்தான் இந்த
போராட்டம். 
அண்ணா ஹசாரே, போலிச்சாமியார் ராம்தேவ் 
ஆகியோரின் போராட்டங்களை விழுந்து விழுந்து
ஆதரித்த பத்திரிகைகள் இப்போராட்டத்தைப் பற்றி
என்ன எழுதப் போகின்றார்கள்.
விடிந்தால் தெரியும் அவர்களின் லட்சணம்!   
 
 
காசு கொடுத்தா தான் செய்தியே போடுற காலம் இது தோழரே
ReplyDelete