மோடிக்கு மட்டுமல்ல, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகள், சிகண்டிகளுக்கும் நேரு குடும்பம் என்றால் எப்போதும் பிடிக்காது.
அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாள் வரும் போது அப்படியே பொங்கி எழுந்து ஜனநாயகக் காவலர்களாக சீன் போடுவார்கள் பாருங்கள், அப்போது நமக்கே புல்லரிக்கும். அப்போதெல்லாம் இந்திரா காந்தியை எந்த அளவிற்கு சாட முடியுமோ அந்த அளவிற்கு சாடுவார்கள்.
அவசரநிலைக்காலத்தில் அன்றைய ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் தேவரஸ், மன்னிப்புக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்திற்காக பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.
அப்படிப்பட்ட மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இரண்டு பதிவுகள் பார்த்தேன்.
பராசக்தி திரைப்படம் வந்த பிறகு அது சொல்லும் செய்தி பாஜக கருத்தியலுக்கும் எதிரானது என்பதால்
இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாகி விட்டார்.
பக்தவத்சலம் பெரியவராகி விட்டார்.
காங்கிரஸிற்கும் திமுகவிற்கும் இடையில் சிண்டு முடிய இப்போது பராசக்தி படத்தை கீழிறக்கி இந்திராவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
மோடியின் விருந்தில் பராசக்தி குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதிலே சிவ கார்த்திகேயனும் ஜி.வி.பிரகாஷும் பாஜகவும் சேர்ந்து விட்டதாக வேறு பாஜகவின் பெண் ரௌடிகள் கோஷ்டியின் தலைவி மயிலை ரமா பதிவிட்டுள்ளார்.
அந்த செய்தி உண்மையென்றால் இன்னும் என்னென்ன பல்டிகள் அடிப்பார்களோ?
பிகு: மேலே உள்ள படம் - அது தோழர் யெச்சூரி நடத்திய ஒரு வீரப் போர். ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். இருப்பினும் நாளை மீண்டும் பகிர்கிறேன். மீண்டும் மீண்டும் நாம் பேச வேண்டிய வீர காவியம் அல்லவா அது!



This comment has been removed by a blog administrator.
ReplyDelete