Saturday, September 30, 2023

மீண்டும் உறுதியானது நீதி . . .

 


பெண்களுக்கு  வாச்சாத்தியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் முன்னெடுக்க தமிழக வரலாற்றில் இல்லாத அளவு இருநூறுக்கும் மேற்பட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் சிறைத் தண்டனை பெற்றனர். தீர்ப்பு வந்தது 2011 ல். 

உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய, நேற்று அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு விட்டது. அன்றைய தர்மபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வன அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்ப்பு சொல்லியுள்ளது.

மேலிடத்தின் கருணைப்பார்வை இருப்பதால் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அயோக்கியத்தனம் புரியலாம், அராஜகம் செய்யலாம், பொய்ப்பிரச்சாரம் செய்யலாம், அவதூறு பரப்பலாம், நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தோடு திரிகிற அனைத்து நாணயமற்றவர்களுக்கும் இது சரியான சவுக்கடி. செங்கோட்டையன்கள் இனியாவது திருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.

முந்தைய தீர்ப்பு வந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் தோழர் பெ.சண்முகம் அவர்களை வேலூரில் எங்கள் சங்கத்தின் நிகழ்வொன்றில் உரையாற்ற அழைத்திருந்தோம்.

அப்போது 20.12.2011 அன்று எழுதிய பதிவை மீண்டும் பகிர்கிறேன். . .

 

கண்ணியமற்ற காவலர்கள் - விலங்கினும் கீழானவர்கள்


 

கண்ணீர்  வர வைத்த  கருத்தரங்கு



 

இன்று  எங்கள் சங்கத்தின்  சார்பில்  அண்ணல் அம்பேத்கர்  நினைவு நாள் - வெண்மணி  தியாகிகள்  நினைவு கருத்தரங்கம்  நடைபெற்றது.


தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்  பெ.சண்முகம் அவர்கள் "வாச்சாத்தி - நீதிக்கான  நெடும் பயணம் "  என்ற  தலைப்பில்   சிறப்புரையாற்றினார்.


வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையும் வனத்துறையும்  இளம் பெண்கள் மீது நிகழ்த்திய  பாலியல் வன்கொடுமை பற்றி  அவர் விவரித்த போது, அவர்கள் அளித்த சாட்சியம் பற்றி  உணர்ச்சி பொங்க  அவர் பேசிய போது அரங்கில் அமர்ந்திருந்த  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்ணில் கண்ணீர்  வழிந்தது. 


இப்படி கூட அரக்கத்தனமாக நடந்து கொள்ள முடியுமா  என்ற கோபமும், பாதிக்கப்பட்ட மக்கள் இறுதி வரை உறுதியாக  இருந்தார்கள் என்பதை அறிந்த போது நெகிழ்வாக   இருந்தது.    


பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதியில் நியாயம் கிடைத்தது, தவறிழைத்தவர்கள்  தண்டனை  பெற்றார்கள் என்ற போது நிறைவாகவும்  இருந்தது.


இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் சிறைத் தண்டனை பெற்ற பின்பும்  காவல்துறையின் அரக்க குணம் மாறவில்லை. திருக்கோயிலூரில்  மீண்டும்  அதே அரக்கத்தனம் அரங்கேறியுள்ளது.


தோழர் சண்முகம் பேசுகிற போது கூறினார். " விலங்குகள் போல  நடந்து கொண்டார்கள் என்று சொல்லி விலங்குகளை கேவலப்  படுத்தாதீர்கள்" 

அது சரிதான் என காக்கிச்சட்டைகள்  நிரூபித்துக் கொண்டே உள்ளனர்.

Friday, September 29, 2023

எப்படி இருந்த பண்ருட்டியார்!!!!

 



நெய்வேலியில் நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு வளர்ச்சி அதிகாரியின் திருமணத்தை நடத்தி வைக்க பண்ருட்டி ராமச்சந்திரன் வந்திருந்தார். சேவல்- இரட்டைப்புறா காலத்திற்குப் பின் அவர் தனியாக “உதிர்ந்த ரோமங்கள்” என்று பட்டம் வாங்கியிருந்த காலம் என்று நினைவு.    அப்போது அவர் ஆதரவாளர் ஒருவர் “பண்ருட்டியாரின் பெருமை இந்தம்மாவுக்கும் தெரியாது, அந்தம்மாவுக்கும் தெரியாது. தெரிந்த ஒரே அம்மா இந்திரா காந்தி அம்மாதான்” என்று  பேசினார்.  எம்.ஜி.ஆர் காலத்தில் சக்தி மிக்க அமைச்சராக, மத்தியரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு செல்பவராக இவர்தான் இருந்தார்.

 பின்னாளில் அவர் பாமகவின் ஒரே எம்.எல்.ஏ வாக 1991 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு தாமரைக்கனியால் செல்லமாக தட்டப்பட்ட போது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களே ஒரு வார காலம் முடங்கிப் போனது.

 அப்பேற்பட்டவர் ஆட்டுக்காரன் அறிஞர் அண்ணா பற்றியும் ஜெ பற்றியும் பேசியது பற்றி ஊடகக்காரர்கள் கேட்டதற்கு எப்படிப்பட்ட பதில்களை சொல்லியுள்ளார் பாருங்கள்.

 அண்ணாவைப் பற்றி அண்ணாமலை பேசியது சரியல்லதான். ஆனாலும் அதில் உள்நோக்கம் இருப்பதாக சொல்ல வேண்டியதில்லை என்கிறார் பண்ருட்டியார்.

 ஜெ வை தண்டனை வழங்கபட்டவர் என்று அண்ணாமலை சொன்னது குற்றச்சாட்டில்லை. அது நிஜம்தானே என்று திருப்பி கேட்கிறார் பண்ருட்டியார். அடுத்த நொடியே ஆனால் அந்த தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை என்றும் சொல்கிறார்.

 பாவம் பண்ருட்டியார்! ஓபிஎஸ் கட்சியின் உறுப்பினராக எடப்பாடி காலி செய்த பாஜக கூட்டணியில் ஒட்டிக் கொள்ள ஆட்டுக்காரனுக்கெல்லாம் வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டார்.

 

முதல்வரை அவர்களே!

 


கேவலம் அரசியல் ஆதாயத்திற்காக மெய்தி இன மக்களை குக்கி இன மக்களுக்கு எதிராக திருப்பி விட்டது பாஜக. அந்த பணியை முன்னின்று செய்த புண்ணியாத்மாக்களில் ஒருவர் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங். இவரது குரு மகா பீடங்கள் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளான டிமோவும் அழுக்கு ஷாவும்.

ஜூலையில் காணாமல் போன இரண்டு மெய்தி மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் உலாவியதால் மெய்தி மாணவர் சங்கம் பிரேன்சிங்கின் வீட்டை சூறையாட சென்றிருக்கிறது. காவல்துறை குவிக்கப்பட்டிருந்ததால் வீடும் அவரும் தப்பித்து விட்டனர்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் அழிவு என்பது போல கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயத்தை தேட நினைப்பவனின் அரசியல் அஸ்தனமும் கலவரத்தால்தான் நிகழும்.

மெய்தி இன மக்களை தூண்டி விட்ட பிரேன்சிங்கிற்கு எதிராக எப்படி மெய்தி இன மக்களே புறப்பட்டு விட்டார்களோ, அதே போன்றதொரு கதி,

டிமோவுக்கும் அழுக்கு ஷாவுக்கும் கண்டிப்பாக நடக்கும். . .

Thursday, September 28, 2023

இதெல்லாம் சாதனையா பாண்டே?

 


சதிகாரன் சாணக்யனாக தன்னை  சித்தரித்துக் கொண்டுள்ள ரங்கராஜ் பாண்டே, டிமோ தமிழ்நாட்டுக்கு என்ன சாதனை செய்தார், எந்த கோரிக்கையை நிறைவேற்றினார் என்று தம்பட்டம் அடிப்பதை பாருங்கள்.



வெட்கங்கெட்டவர்கள் . . .

பிள்ளையாரை அவமானப்படுத்துவது யார்?

 


கடந்த சனியும் ஞாயிறும் கள்ளக்குறிச்சியில் கோட்ட மாநாடு. வெள்ளிக்கிழமை மாலை கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தோம். பலத்த மழை காரணமாக மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது மணலூர்பேட்டையை தாண்டியதும் ஓட்டுனர் பிரேக் போட்டார்.

 சாலை முழுதும் காவலர்கள் குழுமியிருந்தார்கள். காரின் உள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 ஒரு குட்டி யானை வண்டியிலிருந்து ஒரு பெரிய பிள்ளையார் சிலையை அப்படியே சாலையில் தூக்கி வீசினார்கள். பிறகு சாலையிலேயே தரதர என்று இழுத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஒரு நீர்நிலையில் (அது குளமா, ஏரியா என்று அந்த இருட்டில் சரியாக தெரியவில்லை)   மீண்டும் வீசினார்கள். அங்கே இன்னும் சில வினாயகர் சிலைகளும் உடைந்த நிலையில் இருந்தது என்பதை அப்போது தோன்றிய மின்னலின் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது.

 வினாயகர் சிலைகளை எல்லா இடங்களிலும் இப்படித்தான்  அலட்சியமாக கையாளுகிறார்கள். சென்னை கடற்கரையில் ஒதுங்கிய சிலைகளின் சிதிலங்களே அதற்கு சாட்சி (முகப்பில் உள்ள படம்)  இதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார்கள் சங்கிகள். பந்தலில் வைத்து பூஜை செய்த பிறகுதான் அந்த பிள்ளையாருக்கு சக்தி வருமென்றும்  கடைசி ஆரத்தி காண்பித்த பின்பு அந்த சக்தி போய்விடும். அப்போது வெறும் பொம்மைதான் என்றும் சொல்கிறார்கள்.

 


அதாவது இவர்கள் பூஜிக்கும் கடவுளுக்கு சக்தி கொடுக்கின்ற, பிறகு அந்த சக்தியை பறிக்கின்ற அளவிற்கு வல்லமை இவர்களுக்குத்தான் உண்டு. (சனாதன தர்மத்தின் பிரிவினை புத்தி பற்றி அந்த சங்கி கொடுத்துள்ள க்ளூவின் அடிப்படையில் அது என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்)

 சரி, வெறும் பொம்மை என்றே வைத்துக் கொள்வோம், இத்தனை நாள் கடவுளாக வழிபட்ட ஒன்றை சட்டென்று பொம்மையாக கருதி தடியால் அடித்து உடைத்து மேலிருந்து தள்ளி விட ஒரு பக்தனுக்கு மனம் வருமா?

 இந்த சங்கியின் குடும்பத்தில் ஒரு இழப்பு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உயிர் போனால் வெறும் பிணம்தான். அதனால் அந்த பிணத்தையும் பிள்ளையார் பொம்மையைச் செய்வது போல தரதரவென்று இழுத்துப் போய் சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ தூக்கிப் போட்டுவிட்டு வந்து விடுவாரா?

 தந்தை பெரியார் பிள்ளையார் பொம்மைகளை உடைத்தார் என்று இன்னமும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒன்றும் அந்த பிள்ளையார் சிலைக்கு சங்கிகள் போல சக்தியெல்லாம் கொடுத்திருக்கப் போவதில்லை. அதனால் அவர் உடைத்ததும் பொம்மைதான். அதற்கு மட்டும் ஏன் பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

 மொத்தத்தில் பிள்ளையாரை இழிவுபடுத்துவது அவர் பெயரில் அரசியல் செய்யும் சங்கிகள் மட்டுமே.

Wednesday, September 27, 2023

சொச்ச பாரத் – மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கய்யா

 




டிமோ ஆட்சிக்கு வந்த 2014 ம் ஆண்டு மகாத்மா காந்தியை நினைவு கூற எல்லோரும் கையில் துடைப்பத்தோடு சாலைகளை பெருக்க வேண்டும் என்றார்.

மகாத்மா காந்தியின் மத நல்லிணக்கம், நேர்மை, கிராமப்புற முன்னேற்றம் போன்ற ஏராளமான விழுமியங்களை குழி தோண்டி புதைத்து விட்டு ஏதோ சுத்தம் மட்டும்தான் காந்தியின் அடையாளம் என்று கட்டமைத்தார். அதற்காக எல்லோரும் (அதாவது அரசுத்துறை, பொதுத்துறை ஊழியர்கள் மட்டும்) சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு படிவம் வேறு அனுப்பினார்கள்.

“நான் சுத்தமாக இருப்பேன். குப்பை போட மாட்டேன், யாரையும் குப்பை போட விட மாட்டேன், வாரத்திற்கு இரண்டு மணி நேரம் என்று வருடத்திற்கு 100 மணி நேரம் துடைப்பத்தோடு உழைப்பேன். நான் இன்னும் நூறு பேரை இந்த பணியில் இணைத்து அவர்களையும் நூறு மணி நேரம் துடைப்பத்தோடு அலைய வைப்பேன்”


அந்த ஷபத் வாசகங்கள் மேலே உள்ளது போலத்தான் இருக்கும்.

 


அந்த சொச்ச பாரத் கூத்தெல்லாம் இரண்டு மூன்று மாதங்களோடு முடிந்து போனது. தான் எடுத்த ஷபத்தை டிமோவே நிறைவேற்றவில்லை. சீன ஜனாதிபதி இந்தியா வந்த போது மகாபலிபுரம் கடற்கரையில் போட்ட சீனோடு சரி. அப்படி ஒவ்வொரு வாரமும் அவர் சொச்ச பாரத் செய்திருந்தால் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இருக்கும் குப்பைகளால் சமூக ஊடகங்களே நாறியிருக்கும்.

 இதோ ஆட்சியின் அந்திமக் காலத்தில் மீண்டும் சொச்ச பாரத் கூச்சல் தொடங்கி விட்டது. அதே படிவம் அதே ஷபத். தொலைபேசியில் காலர் ட்யூனாக புரியாத இந்தியில் சொச்ச பாரத், சொச்ச பாரத்.

 அரசின் உத்தரவுக்கு இணங்க, மேலதிகாரிகளின் கட்டளையை அமலாக்க அக்டோபர் முதல் நாள் சொச்ச பாரத் நடத்த பொதுத்துறை நிறுவனங்கள் துடைப்பத்தோடும் அதை விட முக்கியமாக காமெராவுடனானும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 வீடியோ எடுத்தால் பின்னணியில் ஒரு பாட்டு முழங்கட்டும்

 “நேற்று, இன்று, நாளை” திரைப்படத்தில் “தம்பி, நான் படிச்சேன் காஞ்சியில நேற்று” பாடலில் வரும்

 “தெருத்தெருவா கூட்டுவது பொது நலத் தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படமெடுத்தால் சுய நலம் உண்டு”

 

Tuesday, September 26, 2023

தலைநகரத்து தறுதலைகள்

 


தில்லியைச் சேர்ந்த 7 பாஜக எம்பிகளால் நாட்டிற்கே அவமானம்


1. பர்வேஷ் வர்மா : தொடர் வெறுப்புப் பேச்சுக் குற்றவாளியான இவர் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர். ஆனால் தற்போது வெறுப்பைப் பரப்பியதற்காக வழக்குகளை எதிர்கொள்கிறார். 


2. கவுதம் கம்பீர் : மோசடி வழக்கில் தொடர்புடையவர். கொரோனா மருந்தை  பதுக்கி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். சமீபத்தில் ஒரு சர்வதேச போட்டியின் போது ஆபாசமான சைகை செய்தார். அவரது தொகுதியில் அரிதாகவே காணப்படுவார். அடிக்கடி கிரிக்கெட் அல்லது டிவியில் சர்ச்சை கருத்து தெரிவிப்பதைக் காணலாம்.   

 

 
3. மனோஜ் திவாரி : விதிகளை மீறி விமான போக்குவரத்து கட்டுப்பாடுப் பகுதிக்குள்நு(ATC) ழைந்ததற்காக வழக்குப்பதிவுக்கு உள்ளானவர். மேலும் பல முட்டாள்தனமான அறிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்.  

 

 
4. ஹர்ஷ் வர்தன் : கொரோனா சமயத்தில் சுகாதார அமைச்சராக தோல்வி யுற்றார். ஒன்றிய  அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அறிவியலற்ற மருத்துவத்தை ஊக்குவித்ததற்காக இந்திய மருத்துவ சங்கத்தால் (ஐஎம்ஏ) கடுமையாக கண்டிக்கப்பட்டவர். 

 

 5. ஹன்ஸ் ராஜ் : ஏமாற்றுதல், போலி வழக்குகளில் தொடர்புடையவர்.பொய்யான பிரமாணப் பத்திரத்திற்காக தில்லி உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்.  

 

 
 6. மீனாட்சி லேகி : வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயி களை “குண்டர்கள்” என்று முத்திரை குத்தி சர்ச்சையை ஏற்படுத்தியவர். எதிர்க் கட்சி எம்.பி.க்களை அமலாக்கத்துறை வழக்குகள் மூலம் தண்டிப்போம் என நாடாளுமன்றத்திலேயே மிரட்டியவர்.  

 

 7. ரமேஷ் பிதுரி : தொடர் வகுப்புவாத வெறியாட்டப் பேர்வழி. கட்டுக்கடங்காத நடத்தையின் வரலாற்றைக் கொண்ட வெறுப்புணர்ச்சியாளர். எப்போதும் இழிபேச்சு பேசுபவர், நமது ஜனநாயகத்திற்கு அவமானம்.  

 

மேற்குறிப்பிட்ட 7 எம்.பி.க்களால் தேசத்திற்கு அவமானம்.

நன்றி - தீக்கதிர்  25.09.2023

பிகு: முகப்பில் உள்ள தலைப்பு மட்டும் என்னுடையது. 

 

 

இரண்டே கேள்வி எடப்பாடி

 



பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்தமைக்காக எடப்பாடிக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமோ! ஆனால் இந்த ஊடல் எப்போது வேண்டுமானாலும் கூடல் ஆகலாம் என்பதால்  அவசரப்பட்டு ஒரு வாழ்த்தை விரயம் செய்ய விரும்பவில்லை.

 

அடுத்த கூடலுக்கு முன்பு முதலில் என் கேள்விகளை கேட்டு விடுகிறேன்.

 


பாஜகவிலிருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவது என்று அறிக்கை சொல்கிறது. பாஜக கூட்டணியிலிருந்து அல்லது என்.டி.ஏ விலிருந்து வெளியேறுகிறது என்றால் சரியாக இருக்கும். அதென்ன பாஜகவிலிருந்து வெளியேறுவது? ஒரு வேளை இரட்டை உறுப்பினராக இரண்டு கட்சிகளிலும் இருந்தீங்களா எடப்பாடி?

 

கூட்டணியை முறித்துக் கொண்டு டிமோவின்  அதிருப்திக்கு ஆளாகியுள்ள எடப்பாடியாரே, உங்கள் வீட்டுக்கு புதிய விருந்தினர்களாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகியோர் வருவார்களே! எதுவும் கிடைக்காத படி எல்லாவற்றையும் பத்திரமாக பதுக்கி விட்டீர்களா?

 

Monday, September 25, 2023

திருந்தவே மாட்டானுங்க

 

பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிவு செய்த ட்வீட் கீழே உள்ளது.


இவனுங்களாகவே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதையாவது பிதற்றுவதுதான் இந்த கயவர்களின் பிழைப்பாகி விட்டது.

புரட்டாசி மாதத்தில் நீ அசைவ உணவு சாப்பிடவில்லையென்றால் அது உன் விருப்பம். உன் வாயில் யாரும் அதை திணிக்கவில்லை. அப்படிப்பட்ட திணிப்பை செய்வது நீங்களும் உங்களும் சனாதனமும், புரட்டாசி மாதம் என்பதால் வீட்டில் கட்டுப்பாடு செய்கிறார்களே என்று புலம்பி வெளியில் சாப்பிடுபவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா சேகரு?

எவ்வளவு அடிவாங்கினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். ஏனென்றால் இவர்களும் நாயின் வாலும் ஒன்று. 


Saturday, September 23, 2023

முன் பனியா? முதல் மழையா?



சூர்யா நடித்த நந்தா திரைப்படத்தில் வரும் "முன் பனியா? முதல் மழையா?" பாடலின் வயலின் வடிவம்  என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு கீழே . . .

https://youtu.be/WkvSt8rUw6w?si=x4C1p0maRK6Uv7AL

Friday, September 22, 2023

துப்பாக்கி ஜோடியும் தமிழ்நாட்டுக் கூட்டணியும்

 


கள்ளக்குறிச்சியில் நாளையும் நாளை மறுநாளும் எங்கள் கோட்டத்தின் 36 வது பொது மாநாடு. அறிக்கையை இறுதிப்படுத்தும் பணியை அச்சகத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த போது அங்கே வந்த ஒரு தோழமைச் சங்கத் தோழர் ஒரு கேள்வி கேட்டார்.

"அதிமுக - பாஜக  சண்டை பற்றி ஏன் தோழர் எழுதவில்லை?"

அவருக்கு நான் அளித்த பதில் . . .

"மாநாட்டுப் பணிகள் காரணமாக நேரம் அவ்வளவாக கிடைக்கவில்லை. மேலும் பாஜக- அதிமுக கூட்டணி என்பது துப்பாக்கி படத்தில் வரும் விஜய்-காஜல் அகர்வால் ஜோடி போல. படத்தில் அவர்கள் காதலிப்பார்கள், ப்ரேக் அப் செய்வார்கள், மறுபடி காதல், ப்ரேக் அப் என்று போகும். கடைசியில் சுபம். அது போலத்தான் இந்த கூட்டணியும். அதனால் இதிலே கருத்து சொல்ல பெரிதாக ஏதுமில்லை"

என்ன? நான் சொல்றது சரிதானே?

Thursday, September 21, 2023

பயம். மகிழ்ச்சி, மோசடி

 


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல டிமோவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது நன்றாகத் தெரிகிறது.

அதனால் மகளிர் மசோதா நிறைவேறியது மகிழ்ச்சி.

ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகுதான் அமலாகும் என்பது வழக்கமான பாஜக மோசடி.

எனவே 2024 ல் இவர்களை துரத்தாவிட்டால் சட்டம் அமலாகுமா என்பது கேள்விக்குறியே!

Tuesday, September 19, 2023

வினாயகருக்கும் விடுதலை . ..

 


வினாயகர் சதுர்த்தியின் போது வழக்கமாக எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வைக்கும் வினாயகர் சிலை இந்த வருடம் இல்லை.

அதனால் நாள் முழுதும் குத்து பாடல்களை மட்டும் கேட்கும் அவஸ்தையில் இருந்து எங்களுக்கு விடுதலை.

எங்களுக்கு மட்டுமா விடுதலை?

வினாயகருக்கும்தான்.

குத்து பாடல்களை  கேட்பதிலிருந்து மட்டுமல்ல, பிள்ளையார் சிலையை திரை போட்டு மூடி விட்டு அங்கேயே டாஸ்மாக் சரக்குகளை அடிப்பதை வேடிக்கை பார்ப்பதிலிருந்து கூட.

ஆனால் இந்த விடுதலை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

சங்கப்பணியாக நேற்று மாலை அலுவலகம் சென்ற போது ஒரு கோயிலிலும் இன்னும் இரண்டு இடங்களிலும் பிள்ளையார் சிலை இருந்தது.

கோயிலில் இருந்து மட்டும் "ஒன்பது கோள்களையும் ஒன்றாய் காண" வரச்சொல்லும் பாடல். மற்ற இடங்களில்?

காவாலய்யா, நூ காவாலய்யா, ஆஆஆஆஆ
அலப்பறை அலப்பறை சூப்பர் ஸ்டாரு.

திரும்பி வருகையில் ஒலித்த பாடல்கள் சத்தியமாக புரியவே இல்லை. பாவம் பிள்ளையார் . . . .

Saturday, September 16, 2023

மாலன் சொன்னதாலேயே . . .

 


மூத்த்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரி இந்தியாவின் பெயரை ஏன் பாரதம் என்று மாற்ற வேண்டுமென விரிவாக எழுதியுள்ளாராம். அவர் தன் முகநூல் பக்கத்தை பூட்டி வைத்துள்ளதால் அவர் உதிர்த்த முத்துக்கள் என்னவென்று அறிய முடியவில்லை.

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்ன அந்த எழுத்து வியாபாரி வாங்கிய காசுக்கு மேலேயே கூவியிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

மாலன் எழுதியதாலேயே நிச்சயம் சொல்லலாம்.

"பாரதம் என்பது தேவையில்லாத ஆணி"

Friday, September 15, 2023

சாவர்க்கர் பாணியை நம்பி . . .

 


வயதான காலத்தில் வாயை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். எல்லா சமயங்களிலும் செல்ஃபி சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்பது எல்லோருக்கும் உதவாது என்பதை இப்போதாவது இந்த வயதான சங்கி உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஜெயிலில் அவரை வழுக்கி விழ வைத்தால் எச்.ராசா உள்ளிட்ட ஆபாச சங்கிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

Thursday, September 14, 2023

மூஞ்சில பச்சை குத்துவாங்களோ?

 


கீழே உள்ள படத்தைப் பாருங்கள்



நாடாளுமன்றக் காவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய சீரூடை இது. எங்கெங்கும் தாமரை. தன் தேர்தல் சின்னத்தை இப்படி வெட்கம் இல்லாமல் அதிகாரபூர்வமான உடையில் கொண்டு வருகிற ஆட்சியாளர்கள் அடுத்து மக்களின் முகத்தில் தாமரைச் சின்னத்தை பச்சை குத்தி விடுவார்களோ!

Wednesday, September 13, 2023

ஜட்ஜய்யா நல்லவரா? கெட்டவரா?

 


அமலாக்கப்பிரிவின் நீதிமன்ற கிளை போல முடிந்து போன வழக்குகளை எல்லாம் மறுபடி விசாரிக்கச் சொல்றாரே, இவரும் அந்த மதுரை ஜட்ஜய்யா மாதிரி அங்கேயிருந்து வந்தவரோ என்று ஒரு சந்தேகம் வந்தது.

இந்த தீர்ப்பைப் பார்த்தால் குழப்பம் அதிகமாயிடுச்சு


ஆனா ஒன்னு.

நல்ல வேளையாக இவர் பெயர் ஆப்ரஹாமோ அல்லது அப்துல்லாவோ இல்லை.

அப்படி இருந்திருந்தால் சங்கிகள் ????


போலீசுக்கே சோதனையா?

 


மற்றவர்களின் இணைய தளத்தை யாராவது கடத்தினால் அதாங்க HACK செய்தால்  காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவை நாடுவார்கள்.

அந்த காவல்துறையின் இணைய தளத்தையே HACK செய்து முடக்கினால்?

ஆம். தமிழ்நாட்டு காவல்துறையின் இணைய தளத்தை தென் கொரிய HACKERகள் முடக்கியிருக்கின்றனர். என்னென்ன பிரச்சினைகள் வருமோ? அதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

ஆனால் ஒன்று இந்த செய்தியை படிக்கையில் 

காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

என்ற தங்கப்பதக்கம், சோதனை மேல் சோதனை பாடலுக்கு நடுவே வரும் வரிகள் நினைவுக்கு வந்தது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்

Tuesday, September 12, 2023

இவன்தாண்டா சங்கி

 

ஏ.ஆர்.ரஹமான் நிகழ்ச்சியின் சொதப்பல் தொடர்பாக ஒரு சங்கியின் பதிவு இது. 

அதெல்லாம் காலையிலேயே எழுதி விட்டாயே, மறுபடியும் ஏன் என்று கேட்கிறீர்கள்!

இந்த சங்கி எதையும் எதையும் ஒப்பிடுகிறான் பாருங்கள்.

டிமோவின் முட்டாள்தனத்தால் ஏடிஎம் முன்பாக நின்றதை போலிக் கதறல் என்று சொல்கிறான் இந்த சங்கி.

இன்றும் நிமிராத இந்தியப் பொருளாதாரத்திற்கான காரணத்தை ஒரு நிகழ்ச்சியில் சில ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதை விட சின்னதாக சொல்லும் அயோக்கியத்தனம் இருக்கிறதே, இதுதான் சங்கித்தனம். 

சங்கிகள் அடி முட்டாள்களாகவோ அல்லது அயோக்கியர்களாகவோதான் இருப்பார்கள் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் நிரூபிக்கிறார்கள். 

ரஹ்மான் - லாபம், சொதப்பல், வன்மம்

 


சென்னையில் ஞாயிறு அன்று நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்?" என்ற நேரடி இசை நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிய யாராலும் மறக்க முடியாத அளவிற்கு சொதப்பலோடும் பார்வையாளர்களுக்கு அவஸ்தையோடும் முடிந்துள்ளது.

இதற்கு யார் பொறுப்பு?

நிச்சயமாக ஏ.ஆர்.ரஹ்மான் தான்,

பார்வையாளர்களுக்கு எப்படிப்பட்ட இசை அனுபவத்தை அளிப்பது என்ற சிந்தனையில் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டை அதற்கான நிறுவனத்திடம் விட்டு விட்டேன் என்று சொல்லியுள்ளார்.

அப்படி அவர் கை கழுவி விட முடியாது.

நிகழ்ச்சி அமைப்பு, கட்டமைப்பு வசதிகள் பற்றியெல்லாம் அவர் விவாதித்து பலவீனங்கள் இருந்தால் போக்கியிருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியது ரஹ்மானுக்காகத்தானே தவிர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக அல்ல. 

அந்த நிறுவனம், லாபம், அதிக லாபம், மேலும் லாபம் என்று செயல்பட்ட காரணத்தால்தான் இந்த சொதப்பல். லாபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் இக்குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. ரசிகர்களுக்கு ஆச்சர்யமூட்டுவேன் என்று சொன்னதை ரஹ்மான் செய்து காண்பிக்கட்டும். இந்த பாடத்திலிருந்து அவர் இனி கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.

நல்ல ஒரு CONTENT  கிடைத்தது என்று ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் மோசமாக தாக்கப்படுகிறார்.

இரண்டு பிரிவினரால் அவர் தாக்கப்படுகின்றனர்.

ஒரு பிரிவு சங்கிகள். ரஹ்மானின் மதத்தை வைத்து அவரை தாக்குவதற்கு உதாரணம் மேலேயே உள்ளது.

இன்னொரு பிரிவு  இளையராஜாவின் DIE HARD விசிறிகள். அவரின் அரசியலை விமர்சித்தாலே கோபம் கொண்டு எழுகிற  இடதுசாரிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள். 

இவற்றையெல்லாம் பார்க்கையில் லாப வெறிக்கு பலியான ரஹ்மானிடம் கோபத்தைத் தாண்டியும்  சொல்ல வேண்டியுள்ளது. WE ARE WITH YOU. 

Monday, September 11, 2023

மறக்க முடியாத செப்டம்பர் பதினொன்று

 கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எங்கள் வேலூர் கோட்ட இதழான சங்கச்சுடர் நான்கு பக்க வடிவிலிருந்து பதினாறு பக்க புத்தக வடிவிற்கு மாறியது. அதிலே ஒரு பகுதி “பொதுச்செயலாளர் பக்கங்கள்”. அதற்காக அப்போது எழுதியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


வரலாற்றில் செப்டம்பர் பதினொன்று

அன்பார்ந்த தோழர்களே,

புதுப் பொலிவோடு புத்தக வடிவில் வரும் சங்கச்சுடர் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சங்கசுடர் இதழை புத்தக வடிவில் வெளியிடுவது என புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் குழு முடிவெடுத்த நாள் செப்டம்பர் பதினொன்று. யதேச்சையாக அமைந்தாலும் கூட செப்டம்பர் பதினொன்று மிக முக்கியமான நாளாகவே உலக வரலாற்றில் அமைந்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அஹிம்சை வடிவிலான சத்யாகிரஹ போராட்ட இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தது 1906  ம் வருடம் செப்டம்பர் 11 அன்றுதான். “பொழுதெல்லாம் என் செல்வம் கொள்ளை போவதோ? நாங்கள் சாவதோ?” என்று கண்டனக்குரல் எழுப்பிய பாரதியின் நினைவுநாளும் இந்த நாள்தான். இந்திய செல்வாதாரங்களை சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பார்த்து பாரதி பாடிய வரிகளை இன்றும் நாம் பயன்படுத்த வேண்டியிருப்பது பெரும் துயரம். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் செல்வங்களை அடகு வைப்பவர்களாக இந்திய ஆட்சியாளர்கள் மாறுவார்கள் என்பதை முன்பே அறிந்துதான் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்றும் பாடினார் போலும். “பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என நினைத்தாயா?” என்று எந்த சக்திக்கும் அடிபணியாமல் இருப்பதற்கான உறுதியையும் லட்சியத்தையும்  நமக்கு பாரதி அளித்துள்ளார்.

ஊடகங்கள்  செப்டம்பர் பதினொன்று என்றால் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்து இரட்டை கோபுரமும் பெண்டகன் அலுவலகமும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  சம்பவத்தை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானில் அமைந்த சோஷலிஸ அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட  தாலிபன், அல் கொய்தா, ஒசாமா பின் லேடன் ஆகியோர் பின்பு  அதே அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியதன் விளைவுதான் செப்டம்பர் பதினொன்று சம்பவம். உலகெங்கிலும் பல பேரழிவுத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிற, நிகழ்த்தும் இஸ்ரேல் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கிற அமெரிக்கா தனது மண்ணில் சந்தித்த மிகப் பெரிய அழிவு இது. இரண்டாம் உலகப் போரில் கூட சோவியத் செஞ்சேனைதான் மிகப் பெரிய இழப்பை சந்தித்து பாசிச ஹிட்லரை முறியடித்தது. ஆனால் பியர்ல் ஹார்பர் தாக்குதல் நீங்கலாக அமெரிக்கா பத்திரமாகவே இருந்தது.

இரட்டைக் கோபுர தாக்குதல் என்ற மோசமான நிகழ்வு மட்டும் வரலாற்றில் கறுப்பு தினமாக செப்டம்பர் பதினொன்றை சித்தரிக்கவில்லை. இரட்டை கோபுர தாக்குதலுக்கு முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இதே நாளில்தான்  அமெரிக்கா நிகழ்த்திய ஒரு பயங்கர அரசியல் படுகொலையும் நடைபெற்றது. சோஷலிச ஆட்சி முறையைக் கொண்டு வந்ததாலும் அமெரிக்க கம்பெனிகள் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததை தடுத்து நிறுத்தியதாலும் மக்கள் சார்ந்த திட்டங்களை அமலாக்கியதாலும் அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதித்த சிலி நாட்டு அதிபர் சால்வடார் ஆலண்டே ,சி.ஐ.ஏ அமைப்பின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் படுகொலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை என்பதை பனாமா கால்வாயைக் கைப்பற்ற பனாமா அதிபர் டோரிஜாஸ், இரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட மொகமது மொசாதக் என்று கடந்த கால கொலைகள் நீளும் என்றால் சதாம் ஹூசேன், முகமது கடாபி என்று அண்மைக் காலப் பட்டியல்கள் சொல்லும். சால்வடார் ஆலண்டே கொல்லப்பட்ட செப்டம்பர் 11 அன்றே இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்த்து ஒரு வரலாற்று நகைமுரண்.

பாரதி மட்டும் செப்டம்பர் பதினோராம் நாள் மறையவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக போராடி வந்த தலைவர் இமானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட்தும் செப்டம்பர் 11 அன்றுதான். 1957 ல் முகவை மாவட்ட கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆதிக்க சக்திகளுக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்து பேசினார் என்ற காரணத்திற்காகவே வெட்டப்பட்டார் இமானுவேல் சேகரன். பாரதி நினைவுநாள் கூட்டமொன்றில் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றி வீட்டுக்கு வரும் வழியில் கொல்லப்பட்டார்.

ஆதிக்க சக்திகளாக வாழ்ந்தவர்களின் நினைவு நாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு செல்கிற பல பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கிய இமானுவேல் சேகரனின் நினைவுநாளை கண்டுகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, அங்கே சொல்பவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன் விளைவாகத்தான் 2011 ம் வருடம் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் பிரச்சினை ஏற்பட்டு காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவி உயிர்கள் பலியாகின.

ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையான காவல்துறையை காப்பாற்றும் விதத்தில் அவர்கள் மீது எந்த தவறுமே இல்லை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே ஒரு பிடிச் சோற்றில் மறைத்து அறிக்கை கொடுத்தது நீதிபதி சம்பத் கமிஷன். அரசுக்கும் நீதிக்கும் மாறாத களங்கமாக செப்டம்பர் 11  பரமகுடி துப்பாக்கிச் சூட்டின் மூலமாய் தமிழக வரலாற்றில்  இடம் பெற்றிருக்கும்.


ஆட்டுக்காரனின் சேம் ஸைட் கோல்


பாவம் ஆட்டுக்காரன், சனாதன தர்மத்துக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து சேம் ஸைட் கோல் அடித்து விட்டார்.


இரண்டே கேள்விகள்தான்.

அதற்கு ஆட்டுக்காரனால் பதில் சொல்ல முடியுமா?

சிவனைப் பார்க்க அனுமதி இல்லாமல் ஒரு சமூகத்தை தாழ்த்தப் பட்டதாக மாற்றியது எந்த சமூகம்? எந்த கருத்தியல்?

நந்தனார் வெளியில் இருந்து தரிசனம் பெற நந்தியை விலகச் சொல்லி காட்சியளித்த சிவனால் நந்தனாரை கோயிலுக்குள் வரவழைத்து தரிசனம் கொடுக்க முடியாமல் தடுத்த கருத்தியல் எது?

இதற்கு ஆட்டுக்காரனால் பதில் சொல்ல முடியுமானால் அந்தாளும் உதயநிதி ஸ்டாலினை விட தீவிரமாக சனாதன ஒழிப்பு பற்றி பேசும் வாய்ப்பு உண்டு.

ஆனால் அந்த முட்டாளுக்கு அப்படியெல்லாம் சிந்திக்கும் அறிவு கிடையாது என்பதுதான் யதார்த்தம்....
 

Sunday, September 10, 2023

சாமியாரே, வட போச்சே!

 


உதயநிதி ஸ்டாலினின் சிகை அலங்கார ஸ்பெஷலிஸ்டான அயோத்தி சாமியார், இந்தியாவை அக்டோபர் 2 க்குள் இந்து ராஷ்டிரமாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய ஒரு செய்தியை படித்தேன்.

ஆஹா, அக்டோபர் 2 அன்று நல்ல சம்பவம் இருக்கிறதென்று நினைத்தால் புஸ்ஸென்று போய் விட்டது.

ஆமாம்.

அந்த செய்தி ரொம்பவே பழசு.

இரண்டு வருடங்களுக்கு முந்தையது,

"வட போச்சே" என்றுதான் தோன்றியது.


தீக்குளிப்பேன் என்று மிரட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் சோடா பாட்டீல் ஜீயர் போல இந்தாளும் வெட்டி உதார்தான் போல . . .

Saturday, September 9, 2023

ராஜாஜி - டிமோ -சனாதனக் காவலன்

 


ராஜாஜியின் ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த மிகவும் பிற்போக்குத்தனமான, மனுதர்ம குலக் கல்வித்திட்டம்தான்.

அதே திட்டம் புதிய கல்விக் கொள்கையில் எட்டிப்பார்த்தது.

விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் இப்போது கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டுள்ளது.


குலத்தொழில்தான் செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதுதான் சனாதனம். இதை ஒழிக்காமல் பாதுகாக்கவா முடியும்!

சனாதன பாதுகாவலனாக திக்ழும் டிமோ ஆட்சியை வீழ்த்துவோம். 

உயிரின் உயிரே

 


"காக்க, காக்க" திரைப்படத்தில் வரும் "உயிரின் உயிரே" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் ....

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Friday, September 8, 2023

மாரிமுத்து - அஞ்சலியும் ஆதங்கமும்

 


மாரிமுத்து - இன்று மறைந்த குணச்சித்திர நடிகர் சமீப காலத்தில் பெரும் புகழ் பெற்றவர். சிறிய பாத்திரமாக இருந்தாலும் அதிலும் தன் முத்திரையை பதித்தவர். நீண்ட காலத்திற்குப் பிறகு என்னை தொலைக்காட்சித் தொடரை பார்க்க வைத்தது "எதிர் நீச்சல்"தான். 

ஆதி குணசேகரனாக மிரட்டி அனைவரையும் எரிச்சலூட்டியவர் என்றால் அது அவரது நடிப்பின் வெற்றி.

பரியேறும் பெருமாள் படத்தைப் பற்றி பலர் எழுதினார்கள். கடைக்குட்டி சிங்கமும் எனக்கு பிடிக்கும். க்ளைமேக்ஸில் கோயிலில் நடப்பதை அலைபேசி மூலமாக வில்லனுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருப்பார். கார்த்தியின் அம்மா பேசும் வசனம் திருப்பு முனையாக இருக்கும். அப்போது போனை அணைத்து விட்டு கார்த்தியிடம் சென்று கையைப் பிடித்துக் கொள்ளும் காட்சி அவரது நடிப்பை சொல்லும்.



"ஏம்மா ஏய்" என்ற குரல் இனி ஒலிக்காது என்பது துயரம். அவருக்கு மனமார்ந்த அஞ்சலி.

கடந்த பத்தியோடு இந்த பதிவு முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஜோதிடத்திற்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்காக அவரது மரணத்தை சங்கிகள் கொண்டாடுவது கேவலமானது. அஞ்சலி செய்தியில் 64 பேர் சிரித்து வைத்திருப்பதும் பலர் மோசமாக எழுதியுள்ளதும் சங்கிகளின் கேவலமான தரத்திற்கு சான்று. இவர்கள் மனிதப் பிறவிகளே கிடையாது. 





ஆட்டுக்காரா ஒரு டவுட்டு

 


ஆமாம். என் சந்தேகம் நியாயமானது என்பதை கீழே உள்ள பதிவைப் பார்த்தால் நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.


இதே மனிதன் முன்பு போட்ட ஒரு பதிவு நினைவுக்கு வந்தது.

ஆட்டுக்காரனை, தமிழ்நாடு, கர்னாடகா என்று இரண்டு மாநிலங்களுக்கு முதல்வராக்க வேண்டும் என்று எழுத முக நூலே இந்தாளையும் அதை விட அதிகமாக ஆட்டுக்காரனையும் கழுவி கழுவி ஊற்றியது.

இந்த பதிவைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வருகிறது,

ஆட்டுக்காரனை கலாய்க்கப் போட்ட பதிவாக இருக்கக் கூடுமோ என்று சின்னதாக சந்தேகம் வருகிறது.

அப்படியென்றால் இன்னும் நன்றாகவே கலாய்க்கட்டும். 

Thursday, September 7, 2023

அசிங்கத்துக்கு கவலைப்படாத எச்.ராசா

 


எச்.ராசாவே கேட்டு வாங்கிக் கொண்ட பல்பு கீழே உள்ளது.




ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாத "துப்பினால் துடைத்துக் கொள்ளும் ஜந்து" அல்லவா எச்.ராசா!