சென்னையில் ஞாயிறு அன்று நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்?" என்ற நேரடி இசை நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிய யாராலும் மறக்க முடியாத அளவிற்கு சொதப்பலோடும் பார்வையாளர்களுக்கு அவஸ்தையோடும் முடிந்துள்ளது.
இதற்கு யார் பொறுப்பு?
நிச்சயமாக ஏ.ஆர்.ரஹ்மான் தான்,
பார்வையாளர்களுக்கு எப்படிப்பட்ட இசை அனுபவத்தை அளிப்பது என்ற சிந்தனையில் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டை அதற்கான நிறுவனத்திடம் விட்டு விட்டேன் என்று சொல்லியுள்ளார்.
அப்படி அவர் கை கழுவி விட முடியாது.
நிகழ்ச்சி அமைப்பு, கட்டமைப்பு வசதிகள் பற்றியெல்லாம் அவர் விவாதித்து பலவீனங்கள் இருந்தால் போக்கியிருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியது ரஹ்மானுக்காகத்தானே தவிர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக அல்ல.
அந்த நிறுவனம், லாபம், அதிக லாபம், மேலும் லாபம் என்று செயல்பட்ட காரணத்தால்தான் இந்த சொதப்பல். லாபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் இக்குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. ரசிகர்களுக்கு ஆச்சர்யமூட்டுவேன் என்று சொன்னதை ரஹ்மான் செய்து காண்பிக்கட்டும். இந்த பாடத்திலிருந்து அவர் இனி கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.
நல்ல ஒரு CONTENT கிடைத்தது என்று ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் மோசமாக தாக்கப்படுகிறார்.
இரண்டு பிரிவினரால் அவர் தாக்கப்படுகின்றனர்.
ஒரு பிரிவு சங்கிகள். ரஹ்மானின் மதத்தை வைத்து அவரை தாக்குவதற்கு உதாரணம் மேலேயே உள்ளது.
இன்னொரு பிரிவு இளையராஜாவின் DIE HARD விசிறிகள். அவரின் அரசியலை விமர்சித்தாலே கோபம் கொண்டு எழுகிற இடதுசாரிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கையில் லாப வெறிக்கு பலியான ரஹ்மானிடம் கோபத்தைத் தாண்டியும் சொல்ல வேண்டியுள்ளது. WE ARE WITH YOU.
திருந்தி திரும்பி வருவார் இளையராஜா. அவருக்கும் ' WE ARE WITH YOU' என்று சொல்லிவையுங்களேன்.
ReplyDeleteரசிகர்களுக்கு ஆச்சர்யமூட்டுவேன் என்று சொன்னதை ரஹ்மான் செய்து காண்பிக்க வேண்டும்
ReplyDeleteஏ.ஆர்.ரஹ்மான் தனது தவறை, எப்படி சரிசெய்யப் போகிறார் என்பதை 'இறைவன் நாடினால்' பார்ப்போம்!
ReplyDeleteநல்லவேளை அந்த கூட்ட நெரிசலில் அசம்பாவிதம் எதுவும்
ReplyDeleteநடக்கவில்லை. பலருக்கு பல ஆயிர ரூபாய்கள் நஷ்டம்.
ரஹ்மான் பலிகடா இல்லை . டிக்கட் வாங்கியவர்கள்தான்
பலிகடாக்கள் .
ஒரு பிரிவினர் அவரை சங்கிகள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காகவே கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல சிறந்த மார்க்கெட்டிங் அறிவு உடையவர் புத்திசாலி. இளையராஜா போல் மனதில் பட்டதை பேசக்கூடியவர் அல்ல. ரகுமானின் இசையை கமர்ஷியலாக யாரும்பயன்படுத்தி விட முடியாது. காப்புரிமை உள்ளதால் அதைனை கண்காணிக்க மேனெஜ்மெண்ட் டீம் உள்ளது. அதனை அவர் மனைவி பெயரில் நடத்துகிறார். நான் வேண்டாமென்று சொன்னாலும் அவர்கள் விடமாட்டார்கள் என்று ரகுமான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இளையராஜாவோ தானே நேரிடையாக பேசி கெட்ட பெயர் சம்பாதித்த்க் கொண்டார். ரகுமான் 30 ஆண்டுகளாக ஒரு நடுத்தர தயாரிப்பாளருக்கு லோ பட்ஜெட் இயக்குநருக்கோ இதுவரை இசை அமைத்துக் கொடுத்ததில்ல்லை. இவர் பணியாற்றிய படங்கள் எலாமே ஜாம்பவான்கள் இயக்கிய தயாரித்த பிரம்மாண்டங்களே. இளையாராஜாவோ முன் பின் சாதாரண முன்பின் தெரியாத இயக்குநருக்கெல்லாம் பணம் எதிர்பாராமல் இசை அமைத்துக் கொடுத்து அவர்களை உயர்த்தி இருக்கிறார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வரிசை முறைதான். முன்னுரிமை இல்லை.ஆனால் சங்கீதம் தெரிந்த அளவுக்கு இங்கிதம் தெரியாதவர் இளையராஜா
ReplyDeleteரகுமான் தன் இசையில் தமிழர்களுக்காவது முன்னுரிமை கொடுத்தாரா என்றால் இல்லை அதுவும் அதிகம் பாடவைத்தது தமிழறியா தமிழறியாப் பாடகர்களே. எஸ்.பி.பி கூட மிகக் குறைந்த அளவே அவர் படத்தில் பாடி இருக்கிறார். இந்தியில் தன் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் வட நாட்டில் நெபோடிசம் உள்ளது வாய்ப்பு தர மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். ஆனால் ஒரு மினிமம் பட்ஜெட் ஹிந்தி பட இயக்குநர் ஒருவர் என் படத்திற்கு ரகுமான் இசை இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அவரை நாங்கள் நெருங்க முட்யாது . இப்போதுகூட நான் பொறுப்பேற்கிறேன் என்கிறாரே தவிர பணத்தை திருப்பிக் கொடுப்பேன் என்று கூறவில்லை, அப்படிக் கொடுத்தால் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளல்நீங்கள் சொன்ன இரண்டு பிரிவினர் மட்டுமல்ல ரகுமானின் ரசிகர்களும்தான் அவரை தாக்கி வருகின்றனர்
தற்போது வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளது. திட்டமிட்டு 25000 க்கும் மேல் போலி டிக்கெட்டை ஒரு கும்பல் அச்சடித்து விற்றுள்ளதாக கூறுகிறார்கள்.(நிகழ்ச்சி அமைப்பாளர் 40000 டிக்கெட் கொடுத்து விட்டு 25000 பேரை எதிர்பார்பதாக சொதப்பியது ஒருபக்கம்) ஆக கிட்டதட்ட 65000 டிக்கெட் பெற்று ( காசு கொடுத்தோ பிரி டிக்கெட்டோ போலி டிக்கெட்டோ) வந்துள்ளனர். எனவே முறையான விசாரனை அவசியம்.
ReplyDelete