ஆஜான்
ட்ங் சிலிப்பாகவில்லை.
 
ஆஜான்
தன் அறிவியல் கதையைப் பற்றிய நிறைவுரையில் 
 “ஆறாவது
படிக்கும் நண்பரின் மகனுக்கு அனுப்பினேன்”
 என்று
எழுதியதை எல்லோரும் கலாய்க்கிறார்கள்.
 ஆறாவது
படிக்கும் நண்பருக்கு மகனா என்று அதிர்ச்சியோடு கேட்கிறார்ககள்.
 “நண்பரின்
ஆறாவது படிக்கும் மகனுக்கு”  என்பதை ஆஜான் டங்
சிலிப்பாகி எழுதி விட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
  ஆசானுக்கு கிராமர் கோளாறு என்று இதை வைத்து கிண்டலடிக்கிறார்கள்.
 ஆஜான்
தவறாகவோ, டங் சிலிப்பாகியோ அப்படி எழுதவில்லை.
 பாவம்
அவர்களுக்கெல்லாம் ஆஜானைப் பற்றி தெரியவில்லை.
 அனைத்துத்
துறறைகளிலும் உள்ள முதன்மையானவர்களோடு மட்டுமே பேசுபவர் அவர். அவர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி
நடித்த “நியூ” படம் பார்த்திருப்பார். அவருக்கு உள்ள அறிவியலாளர் தொடர்புகளில் முதன்மையான  ஒருவர், “நியூ” படம் போல நடைபெற்ற உண்மைச் சம்பவம்  பற்றி சொல்லியிருப்பார். விபரமும் கொடுத்திருப்பார்.
 என்ன
இருந்தாலும் “உடையாள்” அறிவியல் புனைவு கதை அல்லவா?
 ஆதலால்
அறிவியல் தொழில்நுட்பம்  மூலமாக பிறந்த அபூர்வ
மாணவர் ஒருவரிடம் கதையை அனுப்பி இருப்பார். சிந்தனைத் திறன் இல்லாத சாதாரண மாணவர்களால்
இந்த அறிவியல் புனைவைப் படித்து விட்டு கதைக்கு உள்ளே  வர முடியுமா என்ன?
 அது
புரியாமல் ஆஜான் தவறாக எழுதி விட்டார். கிராமர் தெரியவில்லை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
 அவரு
யாரு?
  ஆஜான்.
 உங்களுக்கு
ஆஜான், எனக்கு ஆஜான், ஊருக்கெல்லாம் ஆஜான். உலகுக்கே ஆஜான்.
 ஆஜான்டா!                                     
 
No comments:
Post a Comment