சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Sunday, December 19, 2010
ஹெலிகாப்டரில் அலுவலகம் வரும் மாவட்ட ஆட்சியர் - தமிழகத்தில்தான்
மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா? இது சந்திர மண்டலம் குறித்து
சந்திராயன் அனுப்பிய படங்கள் அல்ல. ஏதோ கிராமத்து சாலையும் அல்ல.
வேலூர் மாநகராட்சியில்(! ?) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு
முன்பாக உள்ள சாலைதான். இந்த சாலை வழியாகத்தான் மாவட்ட
ஆட்சியர் தனது அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும். அருகில் உள்ள
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி
இந்த சாலையைகே கடந்துதான் செல்ல வேண்டும்.
ஏதோ இப்போது பெய்த மழையால் இவ்வளவு மோசமாக உள்ளது
என்று யாரும் நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட எட்டு மாதமாக
இதே கதியில்தான் உள்ளது. கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள
சாலையின் பராமரிப்பு லட்சணமே இப்படி என்றால் மாவட்டம் முழுதும்
உள்ள சாலைகள் எப்படி இருக்கும் என்பதை யாரும் கற்பனை கூட
செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அருகில் உள்ள தங்க நாற்கர சாலை மட்டும் நன்றாகவே
உள்ளது. அதிலே செல்ல பணம் வாங்குவதாலோ என்னவோ அதை
மட்டும் ஒழுங்காக பராமரிககிறார்கள் போலும்.
தன அலுவகம் முன்பாக, தான் அன்றாடம் பயன்படுத்தும்
ஒரு சாலையையே ஒழுங்காக பராமரிக்க முடியாத ஒரு மாவட்ட
ஆட்சியர் தந்து மாவட்டத்தை மட்டும் எப்படி நிர்வகிக்கப் போகின்றார்?
மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகின்றார்?
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுப்புற சுவரை மாற்றி
கிரானைட் கல் பதித்து போயஸ் தோட்ட கதவு போல அமைத்து
செலவு செய்துள்ளார்கள். இக்கதவிற்கு ஒரு திறப்புவிழா வேறு
நடத்தி ஏராளமான மலர் மலைகளையெல்லாம் ஒரு நாளில்
போட்டு அலங்காரமெல்லாம் நடந்தது. ஆனால் சாலை மட்டும்
அப்படியே உள்ளது.
ஒரு வேளை இப்படி இருக்கலாமா?
மாவட்டத்தில் உள்ள எல்லா சாலையும் மோசமாக உள்ளது போல
இதுவும் இருக்கட்டும் என்ற பெருந்தன்மையோ!
அல்லது மாவட்ட ஆட்சியர் தினமும் தனது அலுவலகத்திற்கு
ஹெலிகாப்டரில் வருகின்றாரோ? அதனால்தான் அவருக்கு
சாலைகள் நிலைகள் பற்றி தெரியவில்லையோ ?
பின் குறிப்பு : காலையில் ஐந்தாறு இடங்களை புகைப்படம்
எடுத்திருந்தேன். மதியம் அந்தப்பக்கம் போன போது சில
இடங்களை மட்டும் சரி செய்து சிலவற்றை அப்படியே
வைத்திருந்தார்கள். சரி செய்த இடங்களின் புகைப்படத்தை
போடவில்லை. ஒரு தொழில் தர்மம் வேண்டுமள்ளவ்ல்லவா?
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக
சரிசெய்வதற்காக தமிழக அரசு வேலூர் மாவட்டத்திற்கு
இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தப் பணத்தில்
எந்தெந்த சாலைகளை சரி செய்யப்போகின்றனர், எப்படி
செய்யப்போகின்றனர் என்பதை பார்ப்போம்.
No comments:
Post a Comment