சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, December 17, 2010
தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்கள்
இன்று ( 17 .12 2010 ) காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தியாகத்தின் அடையாளமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின்
வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடம்.
அவர்களின் நெஞ்சுறுதி போற்றத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தடை செய்து அதன் உறுப்பினர்களை அரசு வேட்டையாடிக்
கொண்டிருந்த நேரம் அவரும் அவரது தாயாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவரது அன்னை லட்சுமி சிறையிலேயே
இறந்து போக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
விலக ஒப்புக்கொண்டால்தான் அவரது உடலை
இறுதியாக பார்க்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை
போட்ட போது அதை ஏற்க மறுத்து கொண்ட கொள்கையிலும்
இணைந்த இயக்கத்திலும் உறுதியாக இருந்த தோழரின் அரும்
பணிகள் காரணமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இன்று வலிமையான அமைப்பாக உள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் நடைபெற்றபோது அவ்வமைப்பின்
மாநிலக்குழுக் கூட்டம் எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில்
நடந்தது. அப்போது எங்கள் சங்க அலுவலகத்திற்கு தோழர் பாப்பா உமாநாத்
அவர்கள் வந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளித்தது.
தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு செவ்வணக்கம்!
She is a Great Leader fought for
ReplyDeleteWomen's Rights. Thanks for your
Homage. You may write more on
her