தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது.
இதைக் கேட்டு உசுப்பேறி தவெக தற்குறிகள் மின்னலை பிடிக்க உலகம் சுற்றும் வாலிபன் முருகன் போல முயற்சித்தோ, மின்சார வயரைப் பிடித்தோ கருகிப் போகக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.


No comments:
Post a Comment