கீழேயுள்ள செய்தியை சங்கிகள் நேற்றிலிருந்து பரப்பி மிகவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் இரானின் கருணையைப் பெற இந்திய அரசுக்கு (மக்களுக்கு அல்ல) தகுதி இருக்கிறதா?
வரலாற்று ரீதியாக இரானோடு நட்புறவு பாராட்டிய இந்தியா, அதன் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடுத்த போது ஏன் ஒளிந்து கொண்டது?
இரானின் உச்ச தலைவர் மறைவிற்கு ஒரு அஞ்சலி தெரிவிக்கக்கூட மோடிக்கு ஏன் மனது வரவில்லை?
இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த இரானின் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த கொடுமைக்கு ஏன் வாய் திறக்கவில்லை?
இரானின் எதிர்வினைக்காக கவலைப்பட்ட மோடி, ஏன் இரான் தாக்குண்டது பற்றி மௌனமாகவே இருக்கிறார்?
அயத்துல்லா காமெனி மரணத்திற்கு இந்தியா அஞ்சலி தெரிவித்துள்ளது. அதுவும் யார் தெரிவித்தது? எப்போது?
"செத்ததுக்கு வா ன்னா, பத்துக்கு வந்திருக்க" என்பது போல 28.02.2026 அன்று கொல்லப்பட்ட அயத்துல்லா காமெனிக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் 05.03.2026 அன்று இந்தியாவில் உள்ள இரானின் தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் அஞ்சலி குறிப்பு எழுதி வந்துள்ளார்.
மோடி பத்துக்கும் போக மாட்டார்.
இப்படிப்பட்ட நிலையில் இரானின் நல்லெண்ணத்தை பெறவும் அதை மோடியின் ராஜதந்திரம் என்று பீற்றிக் கொள்ளவும் அவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்ன?



No comments:
Post a Comment