பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில்
பழனி தொகுதியில் தோழர் என்.பாண்டி,
கீழ்வேளூர் தொகுதியில் தோழர் டி.லதா,
கந்தர்வகோட்டை தொகுதியில் தோழர் எம்.சின்னதுரை,
பத்மநாபபுரம் தொகுதியில் தோழர் ஆர்.செல்லசுவாமி,
திருவொற்றியூர் தொகுதியில் தோழர் எல்.சுந்தரராஜன்
ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர்களின் குரல் உழைக்கும் மக்களின் குரலாக, ஜனநாயகத்தின் குரலாக, மத நல்லிணக்கத்தின், மதச்சார்பின்மையின் குரலாக தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கும்.
இந்த பதிவை படிப்பவர்களில் இத்தொகுதிகளின் வாக்காளர்கள் யாராவது இருப்பின் அவர்களை
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் டெல்லி கணேஷ், தன் மனைவி, மகன், மகள் ஆகியோருக்காக செலவு செய்த தொகையை கணக்கு எழுதி அதை சொல்லி குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார். தான் செலவு செய்த பணத்தை மகனின் கல்யாணத்திற்கு வரதட்சணையாக வசூல் செய்ய துடிப்பார். சமைத்துப் போட்டதற்கான பணத்தை கழித்துக் கொண்டு மீதத் தொகையை கொடுத்து விட்டு அம்மா வீட்டிற்குப் போகச் சொல்லி மிரட்டுவார்.
இது திரைப்படக் காட்சி.
அதை தவெக தற்குறிகளின் தலைவன் விஜய் நிஜமாக்கி விட்டார்.
ஆமாம், அவர் இன்று தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் மனைவி, மகன், மகள் மட்டுமல்ல அப்பா, அம்மாவிற்குக் கூட கடன் கொடுத்ததாக கணக்கு காண்பித்துள்ளார்.
நேற்று நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டியை என் மகன் பார்த்துக் கொண்டிருந்த போது எட்டாண்டுகள் முன்பாக 30, மே, 2018 அன்று எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. "முற்றுகை" எழுத தரவுகள் சேகரிக்க கொல்கத்தா போயிருந்த போது பார்த்த சம்பவத்தை பதிவாக எழுதியிருந்தேன்.
இரு அணிகளிலும் முதலாளிகள் அப்படியே தொடர்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் மாநிலத்து அணி என்ற விசுவாசத்தோடுதான் உள்ளனர். கொல்கத்தா போல மும்பையில் சண்டை நடந்ததா என்று தெரியவில்லை.
இதோ பதிவுக்கு செல்கிறேன்.
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. விறுவிறுப்பான காட்சிகள், திருப்பு முனைக் காட்சிகள், கண்ணீர் ததும்பும் செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல காமெடிக் காட்சிகளும் நிறைந்ததாக மட்டும் தேர்தல் இருக்கப் போவதில்லை. காமெடி காட்சிகளும் நிறையவே இருக்கப் போகிறது. அப்படிப் பட்ட காமெடி காட்சிகளை வழங்குவதில் முக்கிய பாத்திரம் விஜய்க்கும் அவரது தவெக தற்குறிகளுக்கும்தான் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் மேலே உள்ள படம்.
முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்தவர் பொன்ராஜ்.
இவர் விஜய் ரசிகைகளை மிகவும் கீழ்த்தரமான வார்த்தை மூலம் கொச்சையாக திட்டியுள்ளார். சில விஜய் ரசிகைகள் பேசுவது எரிச்சலூட்டும் என்பது வேறு விஷயம். அவர்களை தற்குறிகள் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றால் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் பேசுவது கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று.
அதற்காக ஒட்டுமொத்தமாக அனைத்து விஜய் ரசிகைகளையும் கேவலமாக சித்தரிப்பதும், சர்ச்சை உருவான பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிப்பதும் மோசமான அணுகுமுறை.
அப்துல் கலாம் அவர்களோடு நெருக்கமாக இருந்ததாக பொன்ராஜ் சொல்வார். அப்துல் கலாமிடமிருந்து எதுவும் கற்கவில்லை போல . அப்துல் கலாம் உயிரோடு இருந்திருந்தால் இவரது செய்கையை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
இவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ட்ரம்ப் உதிர்த்த லேட்டஸ்ட் முத்து கீழே உள்ளது.
ட்ரம்ப் சொன்னதை இரான் மறுத்துள்ளதாக அதே செய்தி சொல்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாந்தான் என்று ட்ரம்ப் அன்றாடம் சொன்னாலும் ஒரு வார்த்தை கூட மறுத்து பேச மோடி அரசால் ஏன் முடியவில்லை?
துக்ளக் பத்திரிக்கையில் துர்வாசர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தவரும் கரிசல் இலக்கிய நாயகர் கி.ரா இறந்த போது அரசு மரியாதை கொடுத்ததை பொறாமையுடன் எழுதிய வண்ண நிலவன் என்ற ராமச்சந்திரன் உலகநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய பதிவு கீழே உள்ளது.
அந்த பழத்தட்டை வைரமுத்து எடுத்துக் கொண்டு போகாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் நமக்கு இந்த காமெடி பதிவு கிடைத்திருக்காது.
அவருடைய பதிவில் அதிகமான அழுத்தம் பழத்தட்டிற்குத்தானே இருக்கிறது!
பிகு: எழுதி ஒரு வாரமான பதிவு இது
மாறுதலாக ஒரு இசைப் பதிவு.
முகநூலில் பார்த்த ஒரு அருமையான காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அவர்கள் வாசிக்கும் இசைக் கோர்வை, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த அண்டோனியா விவால்டி எனும் இசைக் கலைஞர் அமைத்த "விவால்டி" என்பதாகும்.
எரிச்சலான ஒரு தருணத்தில் ( பத்து கொடுத்த கடுப்புதான்) மனதை மாற்ற இந்த காணொளி உதவிகரமாக இருந்தது.
பிகு: மேலே எதற்கு ஒரு சட்டையின் புகைப்படம்?
விவால்டி என்றதும் அந்த காலத்தில் பாம்பே டையிங் கம்பெனி வெளியிட்ட பிராண்டட் ஷர்ட்டுகள்தான் நினைவுக்கு வந்தது. இன்னமும் அது இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தது.
விவால்டி என்றொரு ப்ரௌசர் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.
தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு கடிதத்தில் கேரள பாஜகவின் முத்திரை இருப்பதும் அது அலுவலக ரீதியிலான தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததும்தான் இன்றைய பரபரப்புச் செய்தி.
பாஜக சீல் உங்கள் அலுவலகத்தில் உள்ளதா?
அல்லது
உங்கள் கடிதங்கள் பாஜக அலுவலகத்தில்தான் தயாரிக்கப்படுகிறதா?
ஆமாம்.
ஏழு வருடத்துக்கு முந்தைய கடிதம் இப்போது ஏன் சுற்றுக்கு வந்து கவனம் பெற்றது?
உங்கள் அலுவலகத்தில் கூட நேர்மையான ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா, என்ன?
புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவரது ஆதரவாளர்கள், புதுவையின் தற்போதைய மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுவை காங்கிரஸ் தலைவருமான வி.வைத்தியலிங்கம் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி காவல்துறையால் கலைக்கப்பட்டுள்ளனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போது எழுதிய பதிவு கீழே நீல நிறத்தில் . . .
ஏதோ 1983 உலகக் கோப்பையில் கபில்தேவ் 175 ரன் அடித்து உலகச் சாதனையை உருவாக்கியது போல
ஏதோ ஒரு சாதனை படைத்ததாக சங்கிகள் இன்று பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் முதல்வராகவும் இந்திய பிரதமராகவும் அவர் 8931 நாட்கள் பதவியில் இருந்து சாதனை படைத்ததாக பீற்றிக் கொள்கிறார்கள்.
குஜராத் முதல்வராகவோ அல்லது இந்திய பிரதமராகவோ அவர் எதுவும் கிழிக்கவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை.
பூஜ் நில நடுக்கத்தின் போது அன்றைய முதல்வர் கேசுபாய் பட்டேல் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக யானை மாலை போட்டு ...............அரசன் ஆன கதையாக அவர் முதலமைச்சர் ஆனார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றதுதான் அவருடைய ஒரே சாதனை.
அவருடைய செல்வாக்கு சரியும் போதெல்லாம் போலி எண்கவுண்டர்கள் செய்தது இன்னொரு சாதனை.
அவருடைய சாதனைகள் தொடர்பாக அவர் முதல்வராக இருக்கும் போதே எழுதிய மூன்று பதிவுகளை படியுங்கள்.
உங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா?
டாடா நானோ -மேற்கு வங்கத்திலும் குஜராத்திலும்
பிரதமராக என்ன கிழித்தார் என்பதை நிறைய நிறைய எழுதியுள்ளேன். எதற்கும் லாயக்கில்லாத, ஊதிப் பெருக்கப்பட்ட வெற்று பிம்பம் மோடி.
அவருடைய ஆட்சிக்காலம் அவருடைய ஊதாரித்தனமான சொகுசு வாழ்விற்கு உதவியுள்ளது. எஜமானர்கள் அதானி, அம்பானி வகையறாக்கள் செல்வம் பெருக வழி வகுத்துள்ளது. ட்ரம்ப், நெதன்யாகு போன்ற எஜமானர்கள் அடி பணிந்து கிடப்பதே சொர்க்கமாய் நினைக்கிறார்.
மோடி குஜராத் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கொடுத்தது
8931 நாட்கள் வேதனை மட்டுமே.
மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.
கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.
நேற்று தமிழ்நாடு முழுதிலும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா?
ஆமாம்.
நான் கூட நடுங்கிப் போய் விட்டேன்.
காரணம் தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இதோ பாருங்கள்
இன்னும் என்னென்ன வருமோ? ஆட்டுக்காரன் தயவு செய்தால் நிறைய காமெடி கிடைக்கும்.
இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.
ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே
கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.
ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள்.
மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.
காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.
அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது.
தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது.
இன்சூரன்ஸ் துறை சம்பந்தமாக நேற்று நிர்மலா அம்மையார் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இன்சூரன்ஸ் ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம் (IRDA) மிகவும் கறாராக பொதுத்துறை, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை கண்காணித்து பாலிசிதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தவறிழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது அபராதம் விதித்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.
எல்.ஐ.சி யின் மீதோ, மற்ற நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீதோ அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அமைச்சர் ஏனோ சொல்லவில்லை. அதெப்படி பொதுத்துறையை அவரால் பாராட்ட முடியும்!
இதை படிக்கையில் ஐ.ஆர்.டி.ஏ ஏதோ சுத்த சுயம்பிரகாச நியாயவான் போல தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.
இந்த அபராதம் எல்லாம் வேறு வழியில்லாமல், ஏராளமான புகார்கள் வந்து, ஆம்புட்ஸ்மேன், நீதிமன்றம் குட்டி விதிக்கப்பட்டவை.
உன்மையின் ஐ.ஆர்.டி.ஏ எல்.ஐ.சி, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒழுங்காற்று வாரியமாக, தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகளுக்கு மடை மாற்றி விடக்கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்களில் மாற்றம்,
எல்.ஐ.சி புதிய பாலிசிகளுக்கு அனுமதி கேட்கையில் இழுத்தடிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது,
முகவர்களின் கமிஷன் விகிதத்தை குறைத்து வணிகத்தை முடக்க முயல்வது (எல்.ஐ.சி யின் வணிகத்தில் 90 % முகவர்கள் மூலம் வருகிறது. தனியார் கம்பெனிகளில் 10 % வணிகம்தான் முகவர் மூலம் வருகிறது)
ஐ.ஆர்.டி.ஏ அடிப்படையில் பொதுத்துறைக்கு வில்லன். அதற்கு மாறான ஒரு சித்திரத்தை நிர்மலா அம்மையார் கொடுத்துள்ளார்.
இந்த டுபாக்கூர் வேலைகள்தான் மோடி அரசின் அடையாளம்.
இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.
இருபத்தி நான்கு மணி நேரமும் போதையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் அதிமுகவின் முன்னாள் மந்திரி திண்டிவனம் சி.வி.சண்முகம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் வரும்.
சந்தேகமே தேவையில்லை. அவர் எப்போதும் அப்படித்தான் என்பதை அந்த ஜந்துவின் இன்றைய பேச்சு நிரூபித்துள்ளது.
தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வேண்டுமானால் பாலியல் குற்றங்களின் சொர்க்கமான உத்திரப்பிரதேசத்திற்கு செல்லட்டும்.
இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த ஆள் பேசியது :பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்பதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்.
இது போன்ற ஜந்துக்கள் இருக்கும் வரை எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் !
பாலியல் ஜல்சா கட்சியின் கூட்டாளி வேறெப்படி பேசுவார்!
நேற்றைய ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி கீழே . . .
சும்மா வேடிக்கைக்காக குண்டு போடுவோம் என்று சொல்கிற ஆளை "முற்றிப் போன பைத்தியக்காரன்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!
பைத்தியக்காரனின் சினேகிதன்/அடிமை/எஜமான் மட்டும் நல்ல மன நிலை கொண்டவராகவா இருக்க முடியும்?
நான் இஸ்ரேலின் நெதன்யாஹூ வை சொல்கிறேன்.
நீங்கள் யாரை நினைத்தீர்கள்?