சில நாட்களாகவே ஒரு குழப்பம்.
பல தோழர்கள் ஒரு நூலை சிலாகித்து எழுதியதை படிக்க நேர்ந்தது.
வழக்கமாக இது போன்ற அறிமுகங்களை படித்தால் உடனடியாக அந்த நூலை வரவழைத்து விடுவேன்.
ஆனால் இந்த நூலை வரவழைப்பதில் மட்டும் ஏனோ ஒரு மனத்தடை.
ஏன்?
அதனை வெளியிடுவது பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம். கடைந்தெடுத்த மக்கள் விரோதி, மத அடிப்படைவாதி, பிற்போக்கு சக்தி.
சென்னை புத்தக விழாவிற்கு வருடம் தோறும் செல்வேன். ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்குள் மட்டும் நுழைய மாட்டேன். அதே போல கிழக்கிலிருந்து பிரிந்து தனியாக கடை திறந்த ஹரன் பிரசன்னாவின் சுவாசம் பதிப்பகத்திற்கும் செல்லக்கூடாது இன்று இந்த வருடம் கறாராக இருந்தேன்.
அதனால்தான் நம்முடைய பணம் பத்ரி சேஷாத்ரிக்கு செல்ல வேண்டுமா என்ற ஒரு கேள்வி, அது புத்தகம் வாங்குவதற்காக இருந்தாலும், மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நல்ல நூலை தவற விடுகிறோமோ என்ற கேள்வியும் எழுகிறது.
என்ன செய்வது? ஒரே டெலிகேட் பொசிஷன் . . .


my god you are going to spend a billion dollars. Then that is really tough
ReplyDeleteபத்து பைசா என்றால் கூட அதை நான் ஏன் என் வர்க்க எதிரிக்கு, மக்கள் எதிரிக்கு கொடுக்க வேண்டும்?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete