ஸ்டேட்டை
விட்டே போயிடு ரெவி
நீ
தமிழ்நாட்டை மதிக்க மாட்டே. தமிழ்நாடு சட்டப்பேரவையோட மரபை மதிக்க மாட்டே, அண்ணல் அம்பேத்கர்
உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு பதிலா மனுதர்மத்தை அரசியல் சாசனத்தை மாத்தனும்னு சொல்ற
உன் நாக்பூர் எஜமான் மாதிரி தமிழ்நாடு சட்டப்பேரவை மரபையும் மாத்தனும்னு சொல்வே!
நீ
எப்படி தமிழ்நாட்டை மதிக்கலையோ, அது போல தமிழ்நாட்டு மக்களும் முட்டாள் சங்கிகளைத்
தவிர வேறு யாரும் உன்னை மதிக்கறதில்லை. ஒவ்வொரு வருஷமும் நீ அசெம்ப்ளிக்கு போறதும்
உடனே வெளியில ஓடி வரதும் பொழப்பா போயிடுச்சு. உன் இஷ்டத்துக்கு எல்லாம் மரபை மாத்த
முடியாதுன்னு உன்னை அடிக்காத குறையா சொல்லிட்டாங்க.
“மதியாதார்
தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, அது அர்த்தமுள்ளது” என்று அந்த காலத்துல கண்ணதாசன் சூர்யகாந்தி படத்துல
ஒரு பாட்டு பாடினார்.
நீ மானமுள்ள மனிதன் என்றால் உன்னை ……… அளவு கூட மதிக்காத
தமிழ்நாட்டை விட்டே ஓடிப் போயிடனும். இனிமே இங்கே தலை வச்சே படுக்கக்கூடாது. பெட்டி
சட்டியை கட்டிக்கிட்டு பீகார் போயிடனும்.
அவ்வை
சொன்னது மானமுள்ள மனிதனுக்குத்தானே, நாங்க சங்கிகள் யாருமே மனுசங்களே கிடையாதே! எங்களுக்கு வெ.மா.ரோ.சூ.சொ என எதுவுமே கிடையாதேன்னு
சொல்லிட்டு துப்பினா துடைத்துக் கொள்ளும் ஆள்தானே நீ!
No comments:
Post a Comment