Saturday, December 21, 2024

சாகித்ய .அகாடமி விருது – சில சந்தேகங்கள்

 



பிரிக்க முடியாதது எதுவோ என்று தருமி இப்போது கேள்வி கேட்டால் “சாகித்ய அகாடமி விருதும் சர்ச்சையும்” என்று சிவனிடமிருந்து பதில் வந்திருக்கும்.

 இந்த வருடம் விருது அறிவிக்கப்பட்ட அ.ரா.வெங்கடாசலபதியின் 1907 நெல்லை எழுச்சியும் வ.உ.சி யும் நூலுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் வரவில்லை என்றே முதலில் நினைத்தேன்.

 அதெப்படி இல்லாமல் போகும் என்று சர்ச்சை வந்து விட்டது.

 இந்த வருட விருதுக்கான இறுதிப்பட்டியலில் இருந்த “சுளுந்தீ” நாவலின் ஆசிரியர்  முத்து நாகு மூலம்தான் சர்ச்சை உருவாகியுள்ளது.

 “திராவிடக் கட்சிகளால் மறைத்து ஓரங்கட்டப்பட்ட திலகரை மீண்டும் உலவ விடுவதற்காக  சங் பரிவாரால் கொடுக்கப்பட்ட விருது என்றும் வ.உ.சி யை அவர்கள் கைப்பற்ற விரும்புகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார்.

 நான் இரண்டு நூல்களையும் இன்னும் படிக்காததால் எந்த கருத்தும் சொல்ல இயலவில்லை. ஒரு வேளை இந்த வருட புத்தக விழாவில் பட்ஜெட் அனுமதித்து இரண்டு புத்தகங்களையும் வாங்கி நேரம் அனுமதித்து படித்து முடித்தால் அப்போது எழுதுவேன்.

 என்னுடைய சந்தேகங்கள் வேறு.

 இறுதிப் பட்டியலும் தேர்வுக்குழுவும் பொது வெளியில் வைக்கப்படுகிறது.

 இறுதிப்பட்டியலை யார், எத்தனை நூல்களிலிருந்து எப்படி இறுதிப்படுத்துகின்றனர்?

 சுளுந்தீ மூன்று வருடங்களாக இறுதிப்பட்டியலில் இருக்கிறது.

 ஒரு நூல் எவ்வளவு முறை பரிசீலிக்கப்படும்? ஒரே நூலை ஒவ்வொரு வருடமும் பரிசீலனைக்கு உட்படுத்தினால் மற்ற புதிய நூல்களின் வாய்ப்பு பறி போகாதா?

 “சுளுந்தீ” மூன்று வருடங்களாக இறுதிப்பட்டியலுக்கு வந்தும் விருது கிடைக்காத விரக்தி அவரை குற்றம் சுமத்த வைத்துள்ளதா?








 மிக முக்கியமான கேள்வி

 போன வருடத்திற்கு முந்தைய வருடம் மூத்த்த்த்தவர் மாலன் மொழி பெயர்ப்புக்கான விருதை வாங்கினார்.

 போன வருட இறுதிப்பட்டியலில்  அவரது “ஜன்னலுக்கு வெளியே” கட்டுரைத் தொகுப்பு இடம் பெற்றிருந்தது. (கிட்டத்தட்ட 30 வருடங்களாக நான் வாங்கிக் கொண்டிருந்த குமுதம் (அது குப்பையாக மாறிய பிறகும்) இதழை இந்த கட்டுரைத்தொடர் உருவாக்கிய எரிச்சலால்தான் நிறுத்தினேன்.

 இந்த வருடம் புலி வேட்டை சிறுகதை தொகுப்பு இடம் பெற்றிருந்தது. இப்படி ஒரு நூல் வந்ததை நான் சத்தியமாக இப்போதுதான் கேள்விப்பட்டேன்,

 சாகித்ய அகாடமி நிவாகக்குழுவில் உள்ள மாலனின் பெயர் மட்டும் எப்படி ஒவ்வொரு வருடமும் இறுதிப் பட்டியலுக்கு வந்து விடுகிறது?

 

 

No comments:

Post a Comment