கீழேயுள்ள
படத்தில் உள்ளவர் யாகூப் மன்சூரி. ஜான்சி மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்தில் பதினாறு
குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் இவர். ஆனால் இவரது இரட்டைக் குழந்தைகள் இருவரும்
இறந்து விட்டனர் என்பதுதான் கொடுமை.
16
குழந்தைகளை பாராட்டியவரை பாராட்டத்தானே செய்வார்கள், ஏன் பழி வாங்குவார்கள் என்று நீங்கள்
கேட்டால் உங்களை மொட்டைச்சாமியார் பற்றி எதுவும் தெரியாத அப்பாவி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால்
அந்த ஜந்துவின் வரலாறு அப்படி.
கோரக்பூர்
மருத்துவமனையில் நடந்த துயர சம்பவம் நினைவில் உள்ளதா?
இல்லையென்றால்
கீழேயுள்ள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளவம்.
உபி
அரசு ஆக்ஸிஜன் சப்ளைக்கான பணத்தை கொடுக்காததால்
அந்த நிறுவனம் ஆக்சிஜன் சப்ளைய நிறுத்தி விட்டது. அந்த கொடிய நாள் இரவு நோய்த் தொற்று
அதிகமாகி நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட ஊர் முழுதும் அலைந்து
திரிந்து தன் சொந்தச் செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளை பாதுகாத்தவர்
டாக்டர் கஃபீல் கான்.
மக்கள்
அவரை நாயகராகக் கருத அதில் பொறாமையடைந்த உபி முதல்வர் மொட்டைச்சாமியார், அவரையே பொய்க்கதை
கட்டி பொறுப்பாக்கி முதலில் இடை நீக்கம் செய்து சிறையில் அடைத்து பின் பணியிலிருந்தே
நீக்கினார்.
அரசின்
தவறை மறைப்பது மட்டுமல்ல, மருத்துவர் இஸ்லாமியர் என்பதும் முக்கியமான காரணம்.
கீழேயுள்ள
இணைப்பின் மூலம் கூடுதல் விபரங்களை நீங்கள் அறியலாம்.
கொடூர வில்லனால் சீரழிந்த நல்லவர் - கோரக்பூர் மருத்துவமனையின் துயர சம்பவம்
இப்போது
சொல்லுங்கள் . . .
பதினாறு
குழந்தைகளை காப்பாற்றிய கடவுளாக கருதப்படுகிற யாகூப் மன்சூரி இஸ்லாமியராக உள்ளதை மொட்டைச்சாமியாரால்
எப்படி தாங்க முடியும்! போதாக்குறைக்கு அவர் அரசை கண்டிக்க வேறு செய்துள்ளார்!
மொட்டைச்சாமியார்
யாகூப் மன்சூரியை என்ன செய்வார் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. அவர் கேரக்டர்
அப்படி.
பாஜக
ஆட்சியில் இருக்கும்வரை நல்லவர்ககளுக்கு காலம்
இல்லை!
No comments:
Post a Comment