இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கொடுத்து விட்டு பாலஸ்தீன நகர் ராஃபாவில் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த ஐ.நா.சபை வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அதிலே பலர் இறந்து போயுள்ளனர். இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைந்த அனில் காலே என்ற இந்திய குடிமகனும் கொல்லப்படவர்களில் ஒருவர்.
ஐ.நா மீது நடத்தப்பட்ட தாக்குதலையோ அதிலே இந்தியர் கொல்லப் பட்டதையோ கண்டித்தோ
இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தோ
இந்தியப் பிரதமரோ புத்திசாலி மந்திரி என்று முட்டாள் சங்கிகள் அளந்து கொண்டிருக்கிற ஜெய்சங்கரோ வாய் திறக்கவே இல்லை.
"எங்க உதவியோடதான் எதிர்க்கட்சி தலைவர்களை, ஊடகவியலாளர்களை உளவு பார்த்தாய், ஏதாவது பேசினால் நடப்பதே வேறு. கொயட்டா இருக்கனும்"
என்று இஸ்ரேல் அந்த 56 இஞ்ச் மாகோழையை (மாவீரனுக்கு எதிர்ப்பதம் மாகோழை. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று ஜெயமோகன் மாதிரி உரிமை கொண்டாட மாட்டேன்) மிரட்டி விட்டது போல.
அதனால்தான் அனைவரும் கொயட்டா இருக்காங்க . . .
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது ஏன் ? சீனா திபெத்தை கபளீகரம் செய்தது ஏன்?
ReplyDeleteஇதை பற்றி பேசுங்கள்.