தேர்தல்
அதிகாரியை திருடனாக்கி எட்டு ஓட்டுக்களை செல்லாத ஓட்டுக்கள் என்று சொல்ல வைத்து உங்காளே வெற்றி பெற்றான்
என்று அறிவிக்க வைத்தீர்.
அது
உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் மூன்று ஆம் ஆத்மி கவுன்ஸிலர்களை விலைக்கு வாங்கி
குதிரை பேரம் நடத்தினீர்.
மறு
தேர்தல் வரும் என்ற உம் நம்பிக்கையை தகர்த்தெறிந்தது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. செல்லாது
என்று அறிவிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களை செல்லத்தக்கது என்று முடிவு செய்து அதன்
அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடந்ததால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மேயராகிறார்.
ஒரு
அதிகாரியை விலைக்கு வாங்கினீர், மூன்று கவுன்சிலர்களை விலைக்கு வாங்கினீர். ஆனாலும்
உம் ராஜ தந்திரம் தோற்று இந்தியா வென்று விட்டதே டிமோ!
இது
உமக்கான முதல் அடி. இன்னும் அடிகள் விழுந்து கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment